பக்கம் எண் :

64

2.67 படி

‘முறையில்’, ‘விதத்தில்’ போன்ற பொருளில்
பயன்படுத்தும்போது சேர்த்து எழுத
வேண்டும்.

    (அ) சட்டப்படி செய்துவிட வேண்டும்.
    (ஆ) நல்ல கொள்கைதான், அதன்படி
    நடக்க முடியுமா?
    (இ) சொன்னபடி செய்திருக்கிறேன்.
    (ஈ) பேரத்தைக் கைவிடும்படி ஆயிற்று.
 
 
2.68அ பற்றி, பற்றிய

    காண்க: .1.5.1அ

    இதுபற்றி
2.68ஆ பற்றி, பற்றிய

    காண்க: 1.5.1ஆ

    இதைப் பற்றிய

2.69 பார்க்கிலும்

‘காட்டிலும்’ என்பதைப் போல் தனித்தே
எழுதப்படுகிறது.

    (அ) வெயிலைப் பார்க்கிலும் குளிர்
    தாங்கிக் கொள்ளக்கூடியதே.
    (ஆ) முன்னைப் பார்க்கிலும் இப்போது
    பெருத்திருக்கிறாய்.
 
2.70 பிரகாரம்

‘படி’ என்பதைப் போல் இதையும் சேர்த்து
எழுத வேண்டும்.

    (அ) சட்டப்பிரகாரம் செய்துவிட
    வேண்டும்.
    (ஆ) அதன்பிரகாரம் நடக்க முடியுமா?
 
 
2.71அ பிறகு

‘செய்த’ போன்ற பெயரெச்சத்தை அடுத்துச்
சேர்த்தே எழுதலாம்.

    (அ) அவர் போனபிறகு என்ன
    செய்தாய்?
2.71ஆ பிறகு

வேற்றுமை உருபு, சாரியை ஏற்ற சொற்களை
அடுத்து வரும்போது இடம்விட்டு எழுத
வேண்டும்.