(ஆ) பெற்றோர் காலமானபிறகு கிராமத்தில் இருக்க விரும்பவில்லை. | (அ) அதற்குப் பிறகு கடிதம் வரவில்லை. (ஆ) அவர் கேட்டுக்கொண்டதன் பிறகு தட்ட முடியவில்லை. |
2.72 பின் முதல் சொல்லாக இருக்கும்போது அடுத்துவரும் சொல்லோடு சேர்த்து எழுத வேண்டும். பின்தலை பின்பக்கம் பின்வாயில் | |
2.73அ பின், பின்பு, பின்னே, பின்னால் ‘செய்த’ போன்ற பெயரெச்சத்தை அடுத்து வரும்போது (‘பிறகு’ போலவே) சேர்த்தே எழுதலாம். (அ) திருமணமானபின் தனிக்குடித்தனம் (ஆ) குழந்தைகள் தூங்கியபின்பு வீடு அமைதியாக இருந்தது. | 2.73ஆ பின், பின்னே, பின்னால் வேற்றுமை உருபு, சாரியை ஏற்ற சொற்களை அடுத்து வரும்போது (‘பிறகு’ போலவே) இடம்விட்டு எழுத வேண்டும். கதவுக்குப் பின் வீட்டின் பின்னால் 2.74 புதிதில் ‘செய்த’ போன்ற பெயரெச்சத்தின் பின் தனித்தே எழுதலாம். (அ) ஊருக்கு வந்த புதிதில் இது நடந்தது. (ஆ) வேலைக்குச் சேர்ந்த புதிதில் இருந்த உற்சாகம். |
2.75 பூர்வமாக, பூர்வமான பெயர்ச்சொற்களோடு இவை சேர்த்தே எழுதப்படுகின்றன. (அ) நான் சொன்னதை மனப்பூர்வமாக ஆதரித்தார். (ஆ) உணர்வுபூர்வமான விவாதம். | |
2.76அ பேரில் ‘மேல்’, ‘மீது’ என்பவை போல சேர்த்து எழுத வேண்டும். | 2.76ஆ பேரில் சாரியை ஏற்ற சொல்லின் பின் இடம்விட்டு எழுத வேண்டும். |