பக்கம் எண் :

66

   
    (அ) என்பேரில் கோபம்
    (ஆ) அவன்பேரில் தவறு
     (அ) அரசு அழைப்பின் பேரில்
    வந்திருக்கிறார்.
    (ஆ) நீ கொடுத்த புகாரின் பேரில்
    விசாரணை
    (இ) நீ சொன்னதன் பேரில் அவனுக்கு
    வேலை கொடுத்தேன்.
2.77 பொருட்டு

எல்லா வகைச் சொற்களின் பின்னும்
இடம்விட்டே எழுதப்படுகிறது.

    (அ) உன் பொருட்டு ஒப்புக்கொள்ள
    வேண்டியதாயிற்று.
    (ஆ) காத்துக்கொள்ளும் பொருட்டுத்
    தாக்குவது குற்றமல்ல.

2.78 பொழுது

‘போது’ என்பதைப் போல் சேர்த்து எழுத
வேண்டும்.

காலையில் எழுந்தபொழுது தலை வலித்தது.

2.79 போதிலும்

‘செய்த’ போன்ற பெயரெச்சத்தின் பின்
சேர்த்து எழுத வேண்டும்.

    (அ) உடன்பாடு ஏற்பட்டபோதிலும்
    சண்டை ஓயவில்லை.
    (ஆ) சொந்த வீடு இருந்தபோதிலும்...

2.80 போது

பெயரெச்சத்தின் பின்னும் ‘இன்’ ஏற்ற
பெயர்ச்சொல்லின் பின்னும் சேர்த்து எழுத
வேண்டும்.

    (அ) கல்லூரிக்கு வருகிறபோது
    பார்த்தேன்.
    (ஆ) கீழே விழுந்தபோது பையில் பணம்
    இருந்தது.
    (இ) நாய் குலைக்காதபோது வாலை
    ஆட்டுகிறது.
    (ஈ) குதிரைச் சவாரியின்போது கீழே
    விழுந்தார்.
    (உ) தேர்தலின்போது கலவரம்