பக்கம் எண் :

67

2.81 போய்

(‘போதல்’ என்ற செயலைக் குறிப்பிடாமல்)
இடைச்சொல்லாகப் பயன்படுத்தும்போது
சேர்த்து எழுத வேண்டும்.

    (அ) குழந்தையைப்போய் ஏன்
    அடிக்கிறாய்?
    (ஆ) என்னைப் போய்ச் சோம்பேறி
    என்கிறாயே!
    (இ) இவ்வளவு பணம் கொடுத்து
    இதைப்போய் வாங்க வேண்டாம்.

2.82 போல், போல

வேற்றுமை உருபு ஏற்காத பெயர்ச்சொற்களின்
பின்னும் வேறுபல வினை வடிவங்களின்
பின்னும் இவை சேர்த்து எழுதப்படுகின்றன.

    (அ) வதந்தி தீப்போல் பரவியது.
    (ஆ)கண்போலக் காப்பாய்.
    (இ) தொடர்ந்தாற்போல் பல நிகழ்ச்சிகள்
    (ஈ) ஒளி மங்குவதுபோல இருக்கிறது.
    (உ) மழை வரும்போல் தெரிகிறது.
    (ஊ) அவர் முன்புபோல் இல்லை.
 
  2.83 போலும்

வாக்கியத்தின் முடிவில் வரும்போது தனித்து
எழுத வேண்டும்.

(அ) அவர் வந்திருந்தார் போலும்.
(ஆ) அது அவரின் சொந்த வீடு போலும்.

2.84 போன்ற

எல்லா வகைச் சொற்களின் பின்னும்
இடம்விட்டு எழுதலாம்.

    (அ) பாம்பு போன்ற விஷ ஜந்துகள்
    (ஆ) அவரைப் போன்ற கருமி யாரும்
    இல்லை.

2.85 போன்று

எல்லா வகைச் சொற்களின் பின்னும்