ஒத்துழைக்கமாட்டேன் பொறுக்கமாட்டான் | |
| 2.90 மாத்திரத்தில் ‘செய்த’ போன்ற பெயரெச்சத்தின் பின் தனித்தே எழுதலாம். வீட்டைப் பார்த்த மாத்திரத்தில் பிடித்துவிட்டது. |
2.91 மாதிரி பெயரெச்சத்தின் பின் சேர்த்து எழுதலாம். (அ) எல்லோரும் படிக்கிறமாதிரி நீயும் படி. (ஆ) எல்லாம் தெரிந்தமாதிரி பேசுகிறார். | |
2.92அ மீது, மீதான காண்க: 1.5.1அ கிளைமீது | 2.92ஆ மீது, மீதான காண்க: 1.5.1ஆ கிளையின் மீது |
2.93 முகமாக ‘செய்த’, ‘செய்யும்’ போன்ற பெயரெச்சங்களின் பின் சேர்த்தே எழுதலாம். (அ) கப்பலைப் பார்க்க வந்தமுகமாக இருக்கிறார்கள். (ஆ) எச்சரிக்கும்முகமாகச் செய்திருக்கும் ஏற்பாடு | |
| 2.94 முடியும், முடியாது இந்த இரு வினைமுற்று வடிவங்களையும் இடம்விட்டு எழுத வேண்டும். (அ) என்னால் ஐந்து மணிக்குள் வந்துவிட முடியும். (ஆ) இதை யாராலும் தடுக்க முடியாது. |