பக்கம் எண் :

70

2.95 முதல்

‘தொடங்கி’ என்ற பொருளில் வரும்போது
சேர்த்து எழுத வேண்டும்.

    (அ) அன்றுமுதல் தொடர்கிறது.
    இந்த நட்பு.
    (ஆ) காலைமுதல் மாலைவரை
    கோயிலில் பூஜை
    (இ) ஊருக்கு வந்ததுமுதல்
    வீட்டிலேயேதான் இருக்கிறேன்.

2.96 முன்

முதல் சொல்லாக இருக்கும்போது அடுத்து
வரும் சொல்லோடு சேர்த்து எழுத வேண்டும்.

    முன்கால்
    முன்புறம்
    முற்பகுதி
 
 
2.97அ முன், முன்பு, முன்பே, முன்னே,
முன்னால்


1. வேற்றுமை உருபு இல்லாத சொற்களின்
பின் ‘எதிரில்’ என்னும் பொருளில்
வரும்போது இவை சேர்த்து
எழுதப்படுகின்றன.

    கண்முன்
    என்முன்
    தொலைபேசிமுன்பு

2. ‘செய்யும்’ போன்ற பெயரெச்சத்தை
அடுத்து வரும்போது சேர்த்தே எழுதலாம்.

    (அ) சூரியன் உதிக்கும்முன்
    எழுந்துவிடுவார்.
    (ஆ) வேலையைத் தொடங்குமுன்பே
    பொருள்களைச் சரிபார்.
 
2.97ஆ முன், முன்பு, முன்பே, முன்னே,
முன்னால்


வேற்றுமை உருபு ஏற்ற சொற்களின் பின்
இவை இடம்விட்டு எழுதப்படுகின்றன.

    தொலைபேசியின் முன்
    இரு மாதங்களுக்கு முன்பு









 
2.98அ மூலம்

    காண்க: 1.5.1அ
    ஆள்மூலம்
2.98ஆ மூலம்

    காண்க: 1.5.1ஆ
    ஆளின் மூலம்