2.99அ மேல் 1. ‘கீழ்’ என்பதைப் போலவே அடுத்து வரும் சொல்லோடு சேர்த்தே எழுதப்படுகிறது. மேல்தட்டு மேல்மாடி மேற்பகுதி 2. காண்க: 1.5.1அ கூரைமேல் | 2.99ஆ மேல் 1. ‘மேல்’ என்பது ‘சிறந்தது’ என்னும் பொருளில் வருமானால் தனித்து எழுதவேண்டும். (அ) கடன் வாங்காமல் இருப்பது மேல். (ஆ) அதற்கு இது மேல். 2. காண்க: 1.5.1ஆ கூரைக்கு மேல் |
| 2.100 மேல், மேல, மேலை ‘மேற்கு’ என்னும் பொருளில் இடம்விட்டு எழுதப்படுகின்றன. (அ) மேல் நாடுகள் (ஆ) மேல வாசல் (இ) மேலைக் கடல் |
2.101 வசம் வேற்றுமை உருபு, சாரியை போன்றவை இல்லாத சொற்களுடன் சேர்த்து எழுத வேண்டும். (அ) என்வசம் கொடுத்துவிட்டார். (ஆ) எல்லாம் விதிவசம். | |
| 2.102 வட இது இடம்விட்டே எழுதப்படுகிறது. (அ) வட புலம் (ஆ) வட இந்தியா (இ) வட திசை |
2.103 வண்ணம் ‘படி’ என்னும் பொருளில் பெயரெச்சத்தின் பின் இதைச் சேர்த்து எழுத வேண்டும். | |