பக்கம் எண் :

72

   
    (அ) யாருக்கும் தெரியாதவண்ணம் அதை
    மறைத்துவிட்டார்.
    (ஆ) பெயர் நிலைக்கும்வண்ணம்
    ஏதாவதுசெய்.
    (இ) வாழ்த்துத் தந்திகள் வந்தவண்ணம்
    இருக்கின்றன.

2.104 வரை, வரைக்கும், வரையில்

எல்லா வகைச் சொற்களோடும் சேர்த்து எழுத
வேண்டும்.

    (அ) காலைமுதல் மாலைவரை கோயிலில்
    பூஜை
    (ஆ) இயன்றவரையில் உதவிசெய்தார்.
    (இ) நீ செய்ததுவரைக்கும் சரி.
    (ஈ) வேலையை முடிக்காதவரை நிம்மதி
    இல்லை.
 
 
  2.105 வலது
‘இடது’ என்பதைப் போன்று தனித்து எழுத
வேண்டும்.

    (அ) வலது கை
    (ஆ) வலது புறம்
 
2.106 வழி

‘மூலம்’ என்ற பொருளில் பெயர்ச்சொல்லுடன்
சேர்த்து எழுத வேண்டும்.

    (அ) எழுத்துவழித் தகவல்
    (ஆ) கடிதவழித் தொடர்பு
    (இ) மரபுவழி வேளாண் முறைகள்
 
  2.107 வழியாக

எல்லா வகைச் சொற்களின் பின்னும்
இடம்விட்டே எழுதப்படுகிறது.

    (அ) ஜன்னல் வழியாகப் பார்.
    (ஆ) மதுரை வழியாகச் செல்கிற
    பேருந்து.
 
2.108 வாக்கில்

எல்லா வகைச் சொற்களோடும் சேர்த்தே
எழுதலாம்.