(அ) நீளவாக்கில் மடி. (ஆ) ஐந்து மணிவாக்கில் வா. (இ) விழுந்தவாக்கில் இரண்டாக முறிந்துவிட்டது. 2.109 விட ஒப்புப் பொருளில் (‘ஐ’ உருபின் பின் வந்தாலும்) சேர்த்து எழுத வேண்டும். (அ) அவருக்குப் பாசத்தைவிடப் பணம் தான் பெரிது. (ஆ) கடனாகக் கொடுப்பதைவிட இனமாகக் கொடுத்துவிடலாம். 2.110 வெகு அடுத்து வரும் சொல்லோடு சேர்த்து எழுத வேண்டும். வெகுநேரம் வெகுதொலைவு வெகுவிரைவில் | | | 2.111 வேண்டும், வேண்டாம் இந்த இரு வினைமுற்று வடிவங்களையும் இடம்விட்டு எழுத வேண்டும். (அ) நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். (ஆ) நன்றியுடன் நினைத்தல் வேண்டும். (இ) கடன் வாங்க வேண்டாம். | 2.112 வேறு முதல் சொல்லாக இருக்கும்போது அடுத்து வரும் ஒரு, ஒருவர், பல, சில, இடம் ஆகிய சொற்களுடன் சேர்த்தே எழுதப்படுகிறது. (அ) வேறொரு பக்கத்தில் (ஆ) வேறொருவர் (இ) வேறுபல நூல்கள் (ஈ) வேறுசில செய்திகள் (உ) வேறிடம் | | | |
|
|