வாக்கியத்தில் ஒரு சொல்லின் இறுதி எழுத்தும் அதைத் தொடரும் அடுத்த சொல்லின் முதல் எழுத்தும் மாற்றம் அடையலாம். இந்த மாற்றத்தை ‘புறச்சந்தி’ என்கிறோம். ஒரு சொல்லில் இடைநிலை, உருபு முதலியவை இணையும்போது மாற்றம் ஏற்படலாம். இதை ‘அகச்சந்தி’ (சொல்லின் உட்பகுதியில் நிகழும் மாற்றம்) என்கிறோம். இங்கு பெரும்பாலும் புறச்சந்தி பற்றியே கூறியிருக்கிறோம். ஆனால், பன்மை விகுதியாகிய ‘கள்’ சொற்களோடு சேர்வது குறித்தும் தற்காலத் தமிழில் இடம்பெறும் பிறமொழிச் சொற்களின் இறுதி மெய்யெழுத்துக்கள் இலக்கணங்களில் கூறப்படாதவையாக இருக்குமானால் அவற்றோடு விகுதிகள் சேர்வது குறித்தும் - இவை அகச்சந்தியாக இருந்தாலும் - ஆங்காங்கே குறிப்பிட்டிருக்கிறோம். தற்காலத்தில் தமிழை எழுதும்போது பெரும்பாலோர் பின்பற்றுகிற அல்லது பெரும்பாலும் காணக்கூடியதாக இருக்கிற சந்தி மாற்றங்களைக் கவனித்துப் பின்வரும் பட்டியலை உருவாக்கியிருக்கிறோம். வெவ்வேறு இலக்கணப் பகுப்புகளில் அடங்கும் சொற்களின் இறுதி எழுத்து ஒன்றாக இருந்தால் அவை ஒரு தொகுப்பாகக் கொடுக்கப்பட்டிருக்கும். ‘பல’ என்பது பெயர்ச்சொல்; ‘அந்த’ என்பது சுட்டுப்பெயர்; ‘போக’ என்பது செ(ய்)ய’ என்னும் வினையெச்சம்; ‘நல்ல’ என்பது பெயரடை; ‘தளதள’ என்பது இரட்டித்து வரும் ஒருவகைச் சொல். இவையும் பிறவும் வெவ்வேறு இலக்கண வகைகளுக்கு எடுத்துக்காட்டுகள். இவை அனைத்தும் ‘அ’ என்பதை இறுதி எழுத்தாகக் கொண்ட சொற்களுக்கான எடுத்துக்காட்டுகளின் தொகுப்பு. இது போன்று வெவ்வேறு இறுதி எழுத்துக்கள் பட்டியலில் உள்ளன. இறுதி எழுத்து எது என்பதைக் கண்டுகொள்வதில் சில இடர்ப்பாடுகள் வரலாம். எடுத்துக்காட்டாக, ‘பாக்கு’, ‘நெசவு’ போன்ற சொற்களில் ‘கு’, ‘வு’ என்பவை இறுதி எழுத்துக்களா அல்லது இரண்டிலும் ‘உ’ என்பதே இறுதி எழுத்தா? பட்டியலில் இவை ‘உ’ வில் முடியும் சொற்களாகக் காட்டப்பட்டிருந்தாலும் ‘கு’ வருமிடத்திலும் ‘வு’ வருமிடத்திலும் காண்க: ‘உ’ என்றும் தரப்பட்டிருக்கும். பாசன தொழில் என்பதில் ‘த்’ மிகுமா என்று ஐயம் எழுமானால் ‘பாசன’ என்பதை ‘அ’வில் முடியும் சொல் என்று எடுத்துக்கொண்டு ‘அ’வில் தேடலாம். ஆனால், ‘பாசனம்’ என்பதே முழுச் சொல். எனவே, அது ‘ம்’ என்பதை இறுதி எழுத்தாகக் |