பக்கம் எண் :

75

கொண்டது. இது போன்று ‘ம்’ என்பதில் முடியும் பல சொற்களில் ‘ம்’ விடப்படலாம்;
அல்லது ‘ம்’ வேறு எழுத்தாக மாறலாம். எனவே, ‘ம்’ என்னும் மெல்லினத்தை இறுதியில்
சேர்த்து அமைத்து முதல் சொல்லை அறிந்துகொள்ள வேண்டும்.
 
0.1 பட்டியலைப் பயன்படுத்தும் முறை

எழுதிக்கொண்டிருக்கும்போது ஒருவருக்குப் பின்வரும் இடங்களில் சந்தி குறித்த
ஐயம் வருவதாக வைத்துக்கொள்வோம்:
  1. இந்த தேர்தல்
2. நல்ல கதை
3. நிறைவேறா கனவு
4. நடு இடம்
5.பல் இடுக்கு
6.முன் நோக்கி
7. மாநகர பேருந்து

‘இந்த’, ‘நல்ல’ என்பவை ‘அ’வில் முடிகின்றன; ‘நிறைவேறா’ என்பதன் இறுதி
எழுத்து ‘ஆ’, ‘நடு’ என்பது ‘உ’வில் முடிகிறது; ‘பல்’ என்பது ‘ல்’ என்ற மெய்யெழுத்திலும்
‘முன்’ என்பது ‘ன்’ என்ற எழுத்திலும் முடிகின்றன. ஏழாவது சொல் ‘மாநகர’
என்றிருந்தாலும் ‘மாநகரம்’ என்பதே முழுமையான சொல்; எனவே, அதன் இறுதி எழுத்து
‘ம்’. மேலே கூறிய இறுதி எழுத்துக்கள் பட்டியலில் தலைப்பு எழுத்துக்களாக அகர
வரிசையில் தரப்பட்டுள்ளதால் அவற்றை எளிதாகக் கண்டுகொள்ளலாம்.

இறுதி எழுத்தைப் பட்டியலில் உறுதிப்படுத்திக்கொண்ட பின் தொடர்ந்துவரும்
சொல்லின் முதல் எழுத்து எதுவோ அதைப் பார்க்க வேண்டும். எடுத்துக்காட்டாக, ‘இந்த’
என்பது ‘அ’வில் முடிகிறது; அதைத் தொடரும் சொல் ‘தேர்தல்’ என்றிருப்பதால் அது
‘த’வில் தொடங்குகிறது. ‘அ’வுடன் ‘த’ சேர்வதற்கான சந்தி விளக்கத்தைப் பார்க்க
வேண்டும். ‘நடு’ என்பது ‘உ’வில் முடிகிறது; அதைத் தொடரும் சொல்லாகிய ‘இடம்’
உயிரெழுத்தில் தொடங்குகிறது. எனவே, ‘உ’வுடன் உயிரெழுத்து சேர்வதற்குத்
தரப்பட்டிருக்கும் விளக்கத்தை (அல்லது விளக்கங்களை) பார்க்க வேண்டும். இவை
போன்றே பிற சொற்களையும் பார்த்துக்கொள்ளலாம்.

     தற்காலத் தமிழில் ஒற்று மிகுவது நிறுத்தக்குறிகளின் பயன்பாட்டால் சில இடங்களில்
தவிர்க்கப்படுகிறது. தவிர்க்கப்படும் இடங்கள் என்று அறியப்பட்டவை:

     (1) ஒற்று இட வேண்டிய சொல்லின் பின் கால்புள்ளியைப் பயன்படுத்துவதால் ஒற்று
மிகுவது தவிர்க்கப்படுகிறது.

     வைதீக மரபுக்கு மாற்றாக, பத்தொன்பதாம் நூற்றாண்டின்...