(2) மேற்கோள் குறிக்குள் இருக்கும் சொல் ஒற்று மிகுவதற்குக் காரணமாக இருந்தாலும் ஒற்று இடுவது தவிர்க்கப்படுகிறது. அதனை ‘தினமணி’யில் வெளியிட்டிருக்கிறார். (3) இது போன்றே அடைப்புக்குறிக்குள் இருக்கும் சொல்லால் ஒற்று மிகலாம் என்றாலும் ஒற்று மிகுவது தவிர்க்கப்படக் காண்கிறோம். எனக்கு அவரை (பாடலாசிரியராக) தெரியாது. (4) மேலும், அடைப்புக்குறியின் உள்ளேயும் வெளியேயும் கீழே காட்டியிருப்பது போல் ஒற்று இடுவது இன்று மிகவும் குறைவு. எனக்கு அவரை (அரசியல்வாதியாகத்) தெரியாது. எனக்கு அவரை (அரசியல்வாதியாக)த் தெரியாது. இதை ஒற்று இடாமல் எழுதுவது மிகுதி. எனக்கு அவரை (அரசியல்வாதியாக) தெரியாது. இவ்வாறே உடற்கூறியலைப் (anatomy) பற்றிய நூல் என்று அடைப்புக்குறியை அடுத்து வரும் சொல்லிற்காக ஒற்று தருவதைவிட உடற்கூறியலை (Anatomy) பற்றிய நூல் என்று ஒற்று தராமல் எழுதப்படுவது இன்றைய வழக்கு. (5) சொல் ஒரு சுருக்கக்குறியீடாக இருக்குமானால் - அது ஒற்று மிகுவதற்குக் காரணமாக இருந்தாலும் - ஒற்று மிகாமல் எழுதப்படுகிறது. மின்னிணைப்பை தமிவா (= தமிழ்நாடு மின்சார வாரியம்) துண்டித்தது. இந்தக் கையேட்டில் மேலே கூறியவாறு நிறுத்தக்குறிகள், சுருக்கக்குறியீடுகள் வரும் போது ஒற்று இடாத முறையே பின்பற்றப்பட்டிருக்கிறது. | | |
|
|