பக்கம் எண் :

77

1. முதல் சொல்லின் இறுதி எழுத்து

எடுத்துக்காட்டு

தொடரும்சொல், விகுதி சந்தி

விளக்கம்

அந்த+சாலை=அந்தச் சாலை

இந்த+தேர்தல்=இந்தத் தேர்தல்

எந்த+பக்கம்=எந்தப் பக்கம்

க,ச,த,ப

 

மிகும்

 

 

அந்த’, ‘இந்த’ முதலிய
சுட்டுப்பெயரடைகளின்
பின்பும் ‘எந்த’ என்ற
வினாப் பெயரடையின்
பின்பும் ஒற்று மிகும்.
‘என்ன’ என்னும்
வினாப்பெயரின் பின்
மிகாது. எ-டு என்ன
கேள்வி?
போக+கண்டேன்=
போகக் கண்டேன்

வர+சொல்=வரச்சொல்

படிக்க+படிக்க=படிக்கப்படிக்க

க,ச,த,ப மிகும் ‘போக’. ‘வர’, ‘படிக்க’
போன்ற (செ(ய்)ய’ என்னும்)
வினையெச்சங்களின் பின்
ஒற்று மிகும்
.
விட+கூர்மை=(கத்தியை)
விடக் கூர்மை

சரிவர+கேள்=சரிவரக் கேள்

கூட+கொடு=கூடக் கொடு

மிக+சரி=மிகச் சரி

போல+பெரிது=
(மலை) போலப் பெரிது

க,ச,த,ப மிகும் சரிவர’, ‘கூட’, ‘மிக’,
போன்ற வினையடைகளின்
பின்னும் ‘விட’, ‘போல’
போன்ற இடைச்சொற்களின்
பின்னும் ஒற்று மிகும்.
ஆக+பேச=அவனாகப் பேச

ஆக+சொல்லி=
அழகாகச் சொல்லி

க,ச,த,ப

மிகும்

‘ஆக’ என்ற வினையடை
விகுதியின் பின் ஒற்று
மிகும்.
நல்ல+கதை=நல்ல கதை

இன்ன+பெயர்=இன்ன பெயர்

இன்றைய+தமிழ்=
இன்றைய தமிழ்

படித்த+புத்தகம்=
படித்த புத்தகம்

எழுதாத+கதை=எழுதாத கதை

க,ச,த,ப மிகாது ‘நல்ல’, ‘இன்ன’, ‘இன்றைய’
போன்ற பெயரடைகளின்
பின்னும் ‘படித்த’, ‘எழுதாத’
போன்ற பெயரெச்சங்களின்
பின்னும் ஒற்று மிகாது.
சின்ன+குடை=
சின்னக் குடை

சின்ன+தட்டு=சின்னத் தட்டு

சின்ன+பெண்=சின்னப் பெண்

க,த,ப

மிகும்

‘சின்ன’ என்னும் பெயரடை
ஏனைய பெயரடைகள்
போல் அல்லாமல் ஒற்று
ஏற்று வருகிறது.
சின்ன(ம்)+சிறு=சின்னஞ்சிறு

 

சிறு,சிறிய (ம்->ஞ்) மறைந்திருக்கும் ‘ம்’, ‘ஞ்’
என மாறுகிறது.