எடுத்துக்காட்டு | தொடரும்சொல், விகுதி | சந்தி | விளக்கம் |
சின்ன+சண்டை= சின்னச் சண்டை/சின்ன சண்டை | ச | மிகலாம் | |
பல+பல=பலப்பல/பலபல/பற்பல சில+சில=சிலசில/சிற்சில | முதல் சொல் லே மீண்டும் வருதல் | மிகலாம் | ஒற்று மிகுந்து ‘பலப்பல’ என வருவது மிகுதி. ‘சிலசில’ என்பது ‘சிலச்சில’ என வருவதில்லை. இரண்டிலும் இறுதி ‘அ’ மறைந்து ‘ல்’ என்பது ‘ற்’ என மாறுகிறது. |
வர+இல்லை=வரவில்லை படிக்க+இல்லை=படிக்கவில்லை | உயிரெழுத்து | ‘வ்’ இடையில் வரும் | ‘இல்லை’ என்பதைச் சேர்த்து எழுதுவதால் உடம்படுமெய் ‘வ்’ வருகிறது. |
வர+இருக்கிறேன்= வரவிருக்கிறேன்/ வர இருக்கிறேன் | உயிரெழுத்து | ‘வ்’ இடையில் வரலாம் | ‘இரு’ என்னும் துணை வினை உடம்படுமெய்யுடனும் அது இல்லாமலும் எழுதப்படுகிறது. ‘(இன்னும் சோறு) சாப்பிட இருக்கிறது’ போன்ற தொடர்களில் ‘இரு’ முதன்மை வினை; இதில் உடன்படுமெய் ‘வ்’ வருவதில்லை. |
கண்ட+இடத்தில்= கண்ட இடத்தில்போக+எழுந்தேன்= போக எழுந்தேன் | உயிரெழுத்து | ‘வ்’ இடையில் வருவதில்லை | ‘கண்டவிடத்தில்’, போகவெழுந்தேன்’ என்று எழுதுவதில்லை, தற்காலத் தில் உடம்படுமெய் இல்லாமலேயே எழுதப்படுகிறது. |
கடகட+என்று= கடகடவென்றுதளதள+என்று= தளதளவென்று படபட+என= படபடவென | என்று, என | ‘வ்’ இடையில் வரும் | ‘கடகட’, ‘தளதள’, ‘படபட’ என்று இரட்டித்துவரும் சொற்களின் பின் ‘என்று’, ‘என’ ஆகியவை உடம்படு மெய்யுடன் சேர்த்து எழுதப்படுகின்றன. |
என்ன+என்ன= என்னென்னஎந்த+எந்த= எந்தெந்த | முதல் சொல்லே மீண்டும் வருதல் | ‘அ’ மறையும் | முதல் சொல்லின் இறுதி ‘அ’ மறைந்து இரண்டாவது சொல்லில் உள்ள உயிரெழுத்து இணைகிறது. |