| 3. முதல் சொல்லின் இறுதி எழுத்து இ | எடுத்துக்காட்டு | தொடரும் சொல், விகுதி | சந்தி | விளக்கம் | | | | | | | துணி+கடை=துணிக் கடை கத்தரி+செடி=கத்தரிச் செடி குட்டி+பையன்=குட்டிப் பையன் | க,ச,த,ப | மிகும் | ‘துணியை விற்கும் கடை’ என வேற்றுமைத் தொகையாகவும் ‘கத்தரியாகிய செடி’ என இருபெயரொட்டாகவும் பெயர்ச்சொல் அடையாகவும் (எ-டு குட்டி) வரும்போது ஒற்று மிகும். | | ஓடி+போ=ஓடிப் போ | க.ச,த,ப | மிகும் | ‘ஓடி’ போன்ற (‘செய்து’ என்னும்) வினையெச்சத்தின் பின் ஒற்று மிகும் | | பற்றி+சொல்= (உன்னை) பற்றிச் சொல் | க,ச,த,ப | மிகும் | ‘பற்றி’ என்பது வினையடை. | | மாதிரி+படிவம்=மாதிரிப் படிவம் | க,ச,த,ப | மிகும் | ‘மாதிரி’ என்பது பெயர்ச்சொல்லாக இருந்து மற்றொரு பெயர்ச்சொல்லுடன் இணையும்போது ஒற்று மிகும். | மாதிரி + பேசு= (நடிகர்)மாதிரி பேசுமாதிரி+செய்= (சொன்ன) மாதிரி செய் | க,ச,த,ப | மிகாது | ‘மாதிரி’ என்பது ‘போல’ என்னும் பொருளில் வரும்போது ஒற்று மிகாது. | படி+கொடு= (கேட்ட) படி கொடுபடி+செய்= (விருப்ப) படி செய் | க,ச,த,ப | மிகாது | ‘படி’ என்னும் இடைச்சொல் ‘முறையில்’, ‘போல’ என்னும் பொருளில் வரும்போது ஒற்று மிகாது. | | செடி+கொடி=செடிகொடி | க,ச,த,ப | மிகாது | செடியும் கொடியும் என்பதில் ‘உம்’ இல்லாமல் (உம்மைத் தொகையாக) வரும்போது ஒற்று மிகாது. | | குடி+தண்ணீர்=குடிதண்ணீர் வெடி+பொருள்=வெடிபொருள் | க,ச,த,ப | மிகாது | முதற்சொல் வினையடியாக இருக்குமானால் (வினைத்தொகையில்) ஓற்று மிகாது. | | செடி+கள்=செடிகள் | -கள் | ‘க்’ மிகாது | ‘-கள்’ பன்மை விகுதி. | | மொழி+இயல்பு=மொழி இயல்பு கோழி+இறகு=கோழி இறகு | உயிரெழுத்து | ‘ய்’ இடையில் வருவதில்லை | பெரும்பாலும் உடம்படுமெய் தந்து எழுதுவதில்லை. | |