4. முதல் சொல்லின் இறுதி எழுத்து ஈ எடுத்துக்காட்டு | தொடரும் சொல், விகுதி | சந்தி | விளக்கம் | ஈ+கடி=ஈக்கடி தீ+சுடர்=தீச்சுடர் தீ+பற்றிக் கொண்டது= தீப்பற்றிக்கொண்டது தீ+பிடித்தது=தீப்பிடித்தது | க,ச,த,ப | மிகும் | ‘ஈ’, ‘தீ’ போன்ற ஓரெழுத்துச் சொற்களில் ஒற்று மிகும். | ஈ+கள்=ஈக்கள் | -கள் | ‘க்’ மிகும் | ‘-கள்’ பன்மை விகுதி. | தீ+அணைப்பு=தீயணைப்பு | உயிரெழுத்து | ‘ய்’ இடையில் வரும் | உயிரெழுத்தின் முன் உடம்படுமெய் ‘ய்’ வரும். | தீ+எரிகிறது= தீ எரிகிறது | உயிரெழுத்து | ‘ய்’ இடையில் வருவதில்லை | வினைமுற்று உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லாக இருந்தாலும் உடம்படுமெய் தந்து சேர்த்து எழுதப்படுவதில்லை. | |