பக்கம் எண் :

82

5. முதல் சொல்லின் இறுதி எழுத்து

எடுத்துக்காட்டு

தொடரும் சொல், விகுதி

சந்தி

விளக்கம்

தேக்கு+கட்டை=தேக்குக்
கட்டை

பளிங்கு+சிலை=பளிங்குச் சிலை

மிளகு+பொடி=மிளகுப் பொடி

எஃகு+தொழில்=
எஃகுத் தொழில்

க,ச,த,ப

மிகும்

கு,சு,டு,ணு,து,பு,று,ரு,ழு,வு
ஆகிய எழுத்துக்களில்
முடியும் பெயர்ச்சொற்கள்
கூட்டுச்சொற்களாக வரும்
போது ஒற்று மிகும்.
அச்சு+கூலி=அச்சுக் கூலி

பஞ்சு+பொதி=பஞ்சுப் பொதி

பசு+கூட்டம்=பசுக் கூட்டம்

 

பட்டு+சட்டை=பட்டுச் சட்டை

துண்டு+தாள்=துண்டுத் தாள்

நடு+கடல்=நடுக் கடல்

     
கணு+கரும்பு=கணுக் கரும்பு

அணு+திரள்=அணுத் திரள்

     
சொத்து+சண்டை=
சொத்துச் சண்டை

மருந்து+பை=
மருந்துப் பை

மது+கடை=மதுக் கடை

தூது+குழு=தூதுக் குழு

     
தப்பு+கணக்கு=தப்புக் கணக்கு

வம்பு+சண்டை=வம்புச் சண்டை

மரபு+கலைகள்=மரபுக் கலைகள்

     
மாற்று+தொழில்=மாற்றுத் தொழில்

கன்று+குட்டி=கன்றுக் குட்டி

     
தெரு+சண்டை=தெருச் சண்டை

முழு+பொறுப்பு=
முழுப் பொறுப்பு

நெசவு+தொழில்=
நெசவுத் தொழில்

     
ஆடு+தலை=ஆட்டுத் தலை

சோறு+பானை=சோற்றுப்பானை

க,ச,த,ப

மிகும்

டு, று என்பதில் முடியும்
பெயர்ச் சொற்களின் இறுதி
இரட்டித்தபின் (-ட்டு,-ற்று
என்று ஆகி) ஒற்று மிகும்.