பக்கம் எண் :

84

5. முதல் சொல்லின் இறுதி எழுத்து

எடுத்துக்காட்டு

தொடரும் சொல், விகுதி

சந்தி

விளக்கம்

பாட்டு+கள்=
பாட்டுகள்/பாட்டுக்கள்

வாழ்த்து+கள்=
வாழ்த்துகள்/வாழ்த்துக்கள்

-கள்

‘க்’

மிகலாம்

-ட்டு,-த்து ஆகிய வற்றின்
பின்‘

-கள்’ விகுதி பெரும்பாலும்
ஒற்று மிகாமல் வருகிறது;
சில சொற்களில் ஒற்று
மிகுவதால் பொருள்
வேறுபடவும் காண்கிறோம்.
எழுத்துக்கள்’ letters;
‘எழுத்துகள்’

writings.

கொசு+கள்=கொசுக்கள்

அணு+கள்=அணுக்கள்

தெரு+கள்=தெருக்கள்

குழு+கள்=குழுக்கள்

மனு+கள்=மனுக்கள்

-கள்

‘க்’

மிகும்

சு,ணு,ரு,ழு,னு ஆகியவற்றில்
முடியும் ஈரசைச் சொற்களின்
முதல் உயிரெழுத்து குறிலாக
இருந்தால்‘

-கள்’ விகுதி சேரும்போது
ஒற்று மிகும். (ஈரசைச்
சொற்களின் முதல் உயிர்
நெடிலாக இருந்தால் ஒற்று
மிகாது. எ-டு காசுகள்)

கொலுசு+கள்=கொலுசுகள்

தராசு+கள்=தராசுகள்

-கள்

‘க்’

மிகாது

மூன்று அசைச் சொற்களில்
ஒற்று மிகாது.
ஆய்வு+கள்=ஆய்வுகள்

-கள்

‘க்’

மிகாது

‘வு’ என்பதில் முடியும்
பெயர்ச்சொற்களின் பின்
‘-கள்’ விகுதி சேரும்போது
ஒற்று மிகாது.
தேக்கு+இலை=
தேக்கிலை/தேக்கு இலை

அச்சு+இயந்திரம்=
அச்சியந்திரம்/அச்சு இயந்திரம்

சொத்து+உரிமை=
சொத்துரிமை/சொத்து உரிமை

நடப்பு+ஆண்டு=
நடப்பாண்டு/நடப்பு ஆண்டு

உயிரெழுத்து   -க்கு,-ச்சு,-த்து,-ப்பு
ஆகியவற்றில் முடியும்
பெயர்ச்சொற்களின் பின்
உயிரெழுத்து வரும்போது
முதலெழுத்தின் ‘உ’
விடப்பட்டு இணைத்து
எழுதப்படுகிறது; ‘உ’
விடுபடாத நிலையில்
தனித்து எழுதப்படுகிறது.
(இருபத்து + ஆறு=
இருபத்தாறு என்று
எழுதுவது விளக்கத்தோடு
ஒத்துப்போகும். எனவே,
‘இருபத்தியாறு’, ‘முப்பத்தி
நான்கு’ என்று ‘இ’கர
உயிரெழுத்து தந்து
எழுதுவதைத் தவிர்க்கலாம்.)