5. முதல் சொல்லின் இறுதி எழுத்து உ எடுத்துக்காட்டு | தொடரும் சொல், விகுதி | சந்தி | விளக்கம் | நடு+இடம்=நடுவிடம் அணு+ஆற்றல்=அணுவாற்றல் துரு+ஏறு=துருவேறு முழு+உருவம்=முழுவுருவம் | உயிரெழுத்து | ‘வ்’ இடையில் வரும் | டு,ணு,ரு,ழு ஆகிய எழுத்துக்களில் முடியும் பெயர்ச்சொற்களின் பின் உயிரெழுத்து வரும்போது உடம்படுமெய் ‘வ்’ வரும். | | 6. முதல் சொல்லின் இறுதி எழுத்து ஊ எடுத்துக்காட்டு | தொடரும் சொல், விகுதி | சந்தி | விளக்கம் | பூ+செடி=பூச்செடி பூ+சொரி=பூச் சொரி பூ+போல=பூப் போல வாழைப்பூ+பொரியல= வாழைப்பூப் பொரியல் மல்லிகைப்பூ+பறிக்க= மல்லிகைப்பூப் பறிக்க | க,ச,த,ப | மிகும் | ‘பூ’ போன்ற ஓரெழுத்துச் சொல்லில் ஒற்று மிகும். ‘பூ’ என்பதை இறுதியாக உடைய பிற சொற்களிலும் மிகும். ‘செடியில் ஒரு பூ பூத்திருக்கிறது’ என்பதில் ஒற்று மிகுவதில்லை. | பூ(ம்)+கொடி=பூங்கொடி பூ(ம்)+செடி=பூஞ்செடி பூ(ம்)+தோட்டம்= பூந்தோட்டம் | க,ச,த | (ம்-> ங்,ஞ்,ந்) | மறைந்திருக்கும் ‘ம்’ என்பது ‘ங்’, ‘ஞ்’, ‘ந்’ என மாறுகிறது. | பூ+இதழ்=பூவிதழ் மூ+இலை=மூவிலை | உயிரெழுத்து | ‘வ்’ இடையில் வரும் | | | | |
|
|