7. முதல் சொல்லின் இறுதி எழுத்து ஏ எடுத்துக்காட்டு | தொடரும்சொல் விகுதி | சந்தி | விளக்கம் | அங்கே இங்கே எங்கே +கண்டேன் உள்ளே வெளியே | க,ச,த,ப | மிகாது | | உள்ளே+அமைந்த= உள்ளே அமைந்தவெளியே+இல்லை= வெளியே இல்லை இடையே+இருக்கும்= இடையே இருக்கும் | உயிரெழுத்து | | ‘உள்ளே’, ‘வெளியே’, ‘கீழே’, ‘மேலே’, ‘இடையே’ போன்ற சொற்களின் பின் உயிரெழுத்தில் தொடங்கும் சொற்கள் இடம்விட்டே எழுதப்படுகின்றன. | கீழே+இருந்து=கீழேயிருந்து மேலே+இருந்து= மேலேயிருந்து | | ‘ய்’ இடையில் வரும் | ‘இருந்து’ (‘தொடங்கி’ என்ற பொருளில் சொல்லுருபாக இருந்தால்)மட்டுமே உடம்படுமெய் ‘ய்’ தந்து சேர்த்து எழுதப்படுகிறது. | 8. முதல் சொல்லின் இறுதி எழுத்து ஐ எடுத்துக்காட்டு | தொடரும் சொல், விகுதி | சந்தி | விளக்கம் | கை+துண்டு=கைத்துண்டு கை+பாங்கு=கைப்பாங்கு தை+பொங்கல்=தைப்பொங்கல் | க,ச,த,ப | மிகும் | ‘கை’, ‘தை’ போன்ற ஓரெழுத்துச் சொற்களின் பின் ஒற்று மிகும். | குதிரை+குளம்பு= குதிரைக் குளம்புமண்பானை+சமையல்= மண்பானைச் சமையல் நகரசபை+தலைவர்=நகரசபைத் தலைவர் | க,ச,த,ப | மிகும் | ‘குதிரையின் குளம்பு’, மண்பானையில் சமையல்’, ‘நகரசபைக்குத் தலைவர்’ என்பதுபோல் வேற்றுமை உறவுகொண்ட தொகைச்சொற்களில் ஒற்று மிகும். | பச்சை+கிளி=பச்சைக் கிளி சித்திரை+திங்கள்= சித்திரைத் திங்கள் சாரை+பாம்பு= சாரைப் பாம்பு மல்லிகை+பூ=மல்லிகைப்பூ | க,ச,த,ப | மிகும் | இரு பெயர்கள் இணைந்து வரும்போது முதல் பெயர் சிறப்புப் பெயராகவும் இரண்டாவது பெயர் பொதுப் பெயராகவும் இருந்தால் ஒற்று மிகும். | |