10. முதல் சொல்லின் இறுதி எழுத்து க் எடுத்துக்காட்டு | தொடரும் சொல், விகுதி | சந்தி | விளக்கம் | பிளாஸ்டிக்+ஆல்= பிளாஸ்டிக்கால் மைக்+ஆவது= மைக்காவது | உயிரெ ழுத்து | ‘க்’ இரட்டிக்கிறது | ‘க்’ பிறமொழிச் சொல்லின் இறுதியாக இருந்து வேற்றுமை உருபுகளையும் இடைச்சொற்களையும் ஏற்கும்போது இரட்டிக்கிறது. | 11. முதல் சொல்லின் இறுதி எழுத்து கு எடுத்துக்காட்டு | தொடரும் சொல், விகுதி | சந்தி | விளக்கம் | 1. குழந்தைக்கு+கொடு= குழந்தைக்குக் கொடு துணிகளுக்கு+ சாயம்=துணிகளுக்குச்சாயம் குடிநீருக்கு+தட்டுப்பாடு= குடிநீருக்குத்தட்டுப்பாடு ஊருக்கு+போ=ஊருக்குப் போ | க,ச,த,ப | மிகும் | வேற்றுமை உருபாகிய ‘கு’ என்பதன் பின் ஒற்று மிகும். இந்த வேற்றுமை உருபு இல்லாமல் வரும் பெயர்ச்சொல்லின் பின் வினைச்சொல் வரும்போது ஒற்று மிகாது. எ-டு மதுரை போயிருந்தேன். | வீட்டுக்கு+காஸ் சிலிண்டர்= வீட்டுக்கு காஸ் சிலிண்டர்நாளைக்கு+பந்த்= நாளைக்கு பந்த் | க,ச,த,ப | மிகுவ தில்லை | இரண்டாவது சொல் பிறமொழிச் சொல்லாகவும் ஒலிப்பு முறையில் வேறாகவும் இருக்குமானால் ஒற்று மிகுவதில்லை. | 2. மேலும் காண்க: ‘உ’ | | | | 12. முதல் சொல்லின் இறுதி எழுத்து ங் எடுத்துக்காட்டு | தொடரும் சொல், விகுதி | சந்தி | விளக்கம் | மோர்சிங்+ஆ=மோர்சிங்கா மோகன்சிங்+(உக்)கு= மோகன்சிங்குக்கு | உயிரெழுத்து | ‘க்’ இடையில் வரும் | ‘ங்’ என்ற எழுத்தில் முடியும் பிறமொழிச் சொற்களோடு தமிழ் விகுதிகள் இணையும்போது ‘க்’ வருகிறது. | |