30. முதல் சொல்லின் இறுதி எழுத்து ள் எடுத்துக்காட்டு | தொடரும் சொல், விகுதி | சந்தி | விளக்கம் | திங்கள்+கிழமை= திங்கட்கிழமை/திங்கள் கிழமைசெய்யுள்+சிறப்பு= செய்யுட்சிறப்பு/செய்யுள் சிறப்பு | க,ச,த,ப | ‘ள்’, ‘ட்’ என மாறலாம் | இடம்விட்டு எழுதுவது பெருவழக்காக உள்ளது. | மக்கள்+தொகை= மக்கள் தொகைதோள்+பட்டை=தோள்பட்டை | க,ச,த,ப | ‘ள்’ மாறுவதில்லை | | கள்+கடை=கள்ளுக்கடை கள்+கலயம்=கள்ளுக்கலயம் முள்+செடி=முள்ளுச்செடி எள்+பொடி=எள்ளுப் பொடி | க,ச,த,ப | ‘உ’ வந்து ஒற்று மிகும் | ளுயிரெழுத்து குறிலாக இருக்கும் ஓரசைச் சொற்கள் ‘உ’ என்னும் சாரியைப் பெற்று (‘ள்’ இரட்டித்து’) ஒற்று மிகும். | ஆள்+கள்=ஆட்கள்/ஆள்கள் நாள்+கள்=நாட்கள்/நாள்கள் பொருள்+கள்=பொருட்கள்/ பொருள்கள் | -கள் | ‘ள்’, ‘ட்’ என மாறலாம் | ‘-கள்’ பன்மை விகுதி. பொருள் என்பது ‘வீட்டுப் பொருள்’ என்பதைக் குறிக்கும்போது ‘-கள்’ விகுதி ஏற்றால் ‘பொருட்கள்’ என்றும் ‘சொல்லின் பொருள்’ என்பதைக் குறிக்கும்போது ‘-கள்’ விகுதி ஏற்றால் ‘பொருள்கள்’ என்றும் வேறுபடுத்தி எழுதப்படுவதும் உண்டு. | தாள்+கள்=தாள்கள் விடைத்தாள்+கள்= விடைத்தாள்கள் படச்சுருள்+கள்= படச்சுருள்கள் | -கள் | ‘ள்’ மாறுவதில்லை | ‘-கள்’ பன்மை விகுதி. | எள்+அளவும்= எள்ளளவும்கள்+உண்ணல்= கள்ளுண்ணல் | உயிரெழுத்து | ‘ள்’ இரட்டிக்கும் | முதல் சொல் ஓரசையாகவும் அதில் வரும் உயிர் குறிலாகவும் இருந்தால் இரட்டிக்கும். இந்தச் சொற்களோடு வினைச்சொற்கள் இணைவது இன்று குறைவாகவே உள்ளது. ‘கள்ளுண்ணல்’ என்று எழுதுவதைவிட ‘கள் உண்ணல்’ என்று பிரித்து எழுதுவது மிகுதி. | 31. முதல் சொல்லின் இறுதி எழுத்து று காண்க: ‘உ’ |