பக்கம் எண் :

99

32. முதல் சொல்லின் இறுதி எழுத்து ன்

 

எடுத்துக்காட்டு

தொடரும்

சொல்,

விகுதி

சந்தி

விளக்கம்

அரசன்+கட்டளை=
அரச கட்டளை

அரசன்+சின்னம்=
அரச சின்னம்

மன்மதன்+பாணம்=
மன்மத பாணம்

க,ச,ப

‘ன்’ மறையும் வேற்றுமை உறவு கொண்ட சில சொற்களில் மட்டுமே ‘ன்’ மறையும்.
வியாழன்+கிழமை=
வியாழக்கிழமை

பேரன்+பிள்ளை=பேரப்பிள்ளை

க,ப

‘ன்’

மறைந்து ஒற்று மிகும்

மிகக் குறைந்த சொற்களிலேயே இந்த மாற்றம் காணப்படுகிறது; ‘புதன் கிழமை’ என்பது மாற்றம் எதுவும் இல்லாமல் எழுதப்படும்.
பொன்+காசு=பொற்காசு

முன்+காலம்=முற்காலம்

பொன்+சிலை=
பொற்சிலை

பொன்+பேழை=பொற்பேழை

க,ச,ப

‘ன்’, ‘ற்’ என மாறும்  
பொன்+தகடு=பொன் தகடு

 

‘ன்’ மாறுவதில்லை ‘பொற்றகடு’ எனத் தற்காலத்தில் எழுதுவது குறைவு.
முன்+கூறிய=முற்கூறிய/முன் கூறிய

‘ன்’, ‘ற்’ என மாறலாம்  
பொன்+நிறம்=பொன்னிறம்

முன்+நோக்கி=முன்னோக்கி

பின்+நோக்கி=பின்னோக்கி

‘ந்’, ‘ன்’ என மாறும் இந்த மாற்றத்துடன் எழுதுவது குறைந்து வருகிறது. ‘பொன் நிறம்’, ‘முன் நிகழ்வு’, ‘பின் நாக்கு’ எனப் பிரித்து இயல்பாக எழுதுவதே பெருவழக்காக இருக்கிறது.
அரசன்+நீதி=அரச நீதி

சந்திரன்+மண்டலம்=சந்திர மண்டலம்

சூரியன்+வழிபாடு=சூரிய வழிபாடு

ந,ம,வ

‘ன்’

மறையும்

வேற்றுமை உறவு கொண்ட சில சொற்களில் மட்டுமே ‘ன்’ மறையும்.
சூரியன்+ஆற்றல்=சூரிய
ஆற்றல்

சந்திரன்+ஒளி=சந்திர ஒளி

உயிரெழுத்து

‘ன்’

மறையும்

வேற்றுமை உறவு கொண்ட சில சொற்களில் மட்டுமே ‘ன்’ மறையும்.