பக்கம் எண் :

தொகைகள்10கி. செம்பியன்

ஆழித்தேர் > ஆழியை உடைய தேர்
( ஆழி- கடலைப் போன்ற பெரியசக்கரம்)
ஒளிமுத்து > ஒளியைத் தரும் முத்து
கண்ணொளித் திட்டம் > கண்ணொளியை வழங்கும் திட்டம்
கண் தானம் > கண்ணை வழங்கும் தானம்
கருக்கலைப்பு > கருவை அழிக்கும் கலைப்பு
கலைக்கல்லூரி > கலையைக் கற்பிக்கும் கல்லூரி
காய்க்குலைத் தெங்கு > காய்க்குலையை உடைய தெங்கு (தென்னை)
குழைக்காது > குழையை உடைய காது
கூலவாணிகன் > கூலத்தை விற்கும் வாணிகன் (நெல் முதலிய பண்டம்)
கூலவீதி > கூலத்தை விற்பனை செய்யும் வீதி
கொலைக்களம் > கொலையைச் செய்யும் களம்
சர்க்கரை ஆலை > சர்க்கரையை உருவாக்கும் ஆலை
சலவைத் தொழிலாளி > சலவையைச் செய்யும் தொழிலாளி
சிசுக்கொலை > சிசுவைக் கொல்லும் கொலை
சித்திரச் சிலம்பு > சித்திரத்தை உடைய சிலம்பு (சித்திரம்+ அத்து+ ஐ)
செங்கால் நாரை > செங்காலை உடைய நாரை
தண்டமிழ்ச் சாத்தன் > தண்டமிழை அறிந்த சாத்தன்
தாமரைக் குளம் > தாமரையை உடைய குளம்
திரைகடல் > திரையை உடைய கடல் (திரை-அலை)
தீப்பெட்டி > தீயைத் தரும் (குச்சிகளை உடைய) பெட்டி
தேர் வேந்தர் > தேரினை உடைய வேந்தர்