தேன்வண்டு | > | தேனை எடுக்கும் வண்டு |
தேனடை | > | தேனை உடைய அடை |
நகை மாளிகை | > | நகையை உடைய மாளிகை |
நாடகக் கணிகை | > | நாடகத்தை ஆடும் கணிகை |
நாள் காட்டி | > | நாளினைக் குறிப்பிடும் காட்டி |
பகுத்தறிவுப் பகலவன் | > |
பகுத்தறிவை உருவாக்கும் பகலவன்
(உவமை ஆகு பெயர்) |
பயன்மரம் | > | பயனைத் தரும் மரம் |
பயிற்சிப் பள்ளி | > | பயிற்சியைத் தரும் பள்ளி |
புகையிலை | > | புகையைத் தரும் இலை |
புத்தகச் சாலை | > | புத்தகத்தை உடைய சாலை |
புரட்சிக்கவிஞர் | > | புரட்சியை பாடும் கவிஞர் |
புரட்சிப் புயல் | > |
புரட்சியை உருவாக்கும் புயல் (புயல் -
உவமை ஆகுபெயர்) |
புரிநூல் | > | புரியை உடைய நூல் |
புலிக்கொடி | > | புலியை உடைய கொடி |
புள்ளிமான் | > | புள்ளியை உடைய மான் |
பூங்கா | > | பூவை உடைய கா (கா- சோலை) |
பைங்கால் கொக்கு | > | பைங்காலை உடைய கொக்கு |
பொறியியல் கல்லூரி | > | பொறியியலைக் கற்பிக்கும் கல்லூரி |
பொன்செய் கொல்லர் | > |
பொன்னைச் செய்யும் கொல்லர் செய்கொல்லர்
என்று மட்டும் இருந்தால்செய்த-செய்கின்ற -செய்யும்
கொல்லர் என்றாகி வினைத்தொகையாகும். |
மரங்கொல் தச்சர் | > |
மரத்தைக் கொல்லும் தச்சர் (கொல் தச்சர் என்று
மட்டும்இருந்தால் வினைத்தொகை) |