ஆறாம் வேற்றுமைக்கு இற்றைத்
தமிழில் 'உடைய' என்பது சொல்லுருபாக வரும்.
சாத்தனுடைய புதல்வன்
சாத்தனுடைய புதல்வர்
சாத்தனுடைய வீடு
சாத்தனுடைய வீடுகள்
இவ்விளக்கங்களுடன் ஆறாம் வேற்றுமைத் தொகையை நோக்குவோம்:
ஆறாம் வேற்றுமைத் தொகை
அன்னத் தூவி > அன்னத்தினது தூவி
ஆட்டுக் குட்டி > ஆட்டினது குட்டி
ஆட்டுத் தோல் > ஆட்டினது தோல்
ஆசிரியர் குழு > ஆசிரியரது குழு
(ஒரு விளக்கம்: ஆசிரியர் எனும் சொல் உயர்திணை
ஆகையினால் ஒற்றெழுத்து மிகுத்து எழுதக்கூடாது.
வள்ளுவர் கோட்டம், திருவள்ளுவர் படிப்பகம்,
திராவிடர் கழகம், ஆசிரியர் பேரவை, மாணவர்
கூட்டணி என வரும்.
தேர்க்கால் = தேரினது கால் தேர் எனும் சொல்
அஃறிணையாகையால் ஒற்று மிகுந்து வரும். ஆசிரியர்
குழு, தேர்க்கால் என்பன இரண்டும் ஆறாம்
வேற்றுமைத் தொகை என்றாலும் ஒன்றில் மிகுந்து
வரும், ஒன்றில் மிகாது என்பதனை அறிக.)
ஏதிலார் குற்றம் | > | ஏதிலாரது குற்றம் |
ஐந்தவித்தான் ஆற்றல் | > | ஐந்தவித்தானது ஆற்றல் |
கல்லாதான் ஒட்பம் | > | கல்லாதானது ஒட்பம் (அறிவு) |
குருவிக் கூடு | > | குருவியினது கூடு |
குழுக்கூட்டம் | > | குழுவினது கூட்டம் |
தாயின் மணிக்கொடி | > | தாயினது மணிக்கொடி |
|
|
|
|