| படைமாட்சி |
> |
படையினது மாட்சி |
| பலாச்சுளை |
> |
பலாவினது சுளை |
| பனித்துளி |
> |
பனியினது துளி |
| பனுவல் துணிவு |
> |
பனுவலது (நூல்) துணிவு |
| பாம்புத்தோல் |
> |
பாம்பினது தோல் |
| புலித்தோல் |
> |
புலியினது தோல் |
| மக்கள் அறிவுடைமை |
> |
மக்களது அறிவுடைமை |
| மயில் பீலி |
> |
மயிலினது பீலி |
| மழைத்துளி |
> |
மழையினது துளி |
| மழைத்தூறல் |
> |
மழையது தூறல் |
| மான்கணம் |
> |
மானினது கணம் (கூட்டம்) |
| மான்கொம்பு |
> |
மானினது கொம்பு |
| யானைத்தோல் |
> |
யானையினது தோல் |
| வினைத் திட்பம் |
> |
வினையினது திட்பம் |
ஆறாம் வேற்றுமையில் உருபும் பயனும் உடன்தொக்க தொகை வருதல் இல்லை.
|
|