பக்கம் எண் :

தொகைகள்34கி. செம்பியன்

7. ஏழாம் வேற்றுமைத் தொகை

     ஏழாம் வேற்றுமைக்குக் 'கண்' என்பது முதன்மை உருபாகவும் கண், கால்,
புறம், அகம், உள், உழை, கீழ், மேல், பின், சார், அயல், புடை, தேவகை
(திசைக்கூறு), முன், இடை, கடை, தலை, வலம், இடம் ஆகிய உருபுகள்
(உருபின் பொருள்பட வரும் பிறசொற்கள்) பிற உருபுகளாகவும் எண்ணப்பட்டுள்ளன.
இவ்வேற்றுமை இடம், நிலம், காலம் ஆகிய பொருள்களில் பயின்றுவரும்.
இடம் > தட்டுப்புடைக்கண் வந்தான் (நெல் கொழிக்கின்ற இடம்)
நிலம் > மாடத்தின்கண் இருந்தான்
காலம் > கூதிர்க்கண் வந்தான்
இவ்வண்ணம் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ள உருபுகளுள் 'அயல்' எனும்
உருபினைக் கழித்துப் புதிய பத்து உருபுகளை நன்னூலார் எண்ணியுள்ளார் அவை:

கால் - ஊரக்கானிவந்த பொதும்பர்
கடை - வேலின்கடை மணிபோற்றிண்ணியான்
இடை - நல்லாரிடைப் புக்கு
தலை - வலைத்தலை மானன்ன நோக்கியர்
வாய் - குரைகடல் வாயமுதென்கோ
திசை - தேர்த்திசை இருந்தான்
வயின் - அவர்வயின் சொல்லாய்
முன் - கற்றார்முன் தோன்றா கழிவிரக்கம்
சார் - காட்டுச்சாரோடுங் குறுமுயால்
வலம் - கைவலத்துள்ளது கொடுக்கும்
இடம் - இல்லிடப் பரத்தை
மேல் - தன்மேல் கடுவரை நீரிற் கடுத்து வரக்கண்டும்
கீழ் - பிண்டிக் கண்ணார் நிழற்கீழ் எந்தம் அடிகள்