பக்கம் எண் :

தொகைகள்35கி. செம்பியன்

புடை - எயிற்புடை நின்றான்
முதல் - சுரன்முதல் வந்த உரன்மாய் மாலை
பின் - காதலிபின் சென்றதம்ம
பாடு - நம்பாடு அணையாத நாள்
அளை - கல்லளைச் சுனைநீர்
தேம் - தோழிக்குரியவை கோடாய் தேத்து
உழை - அவனுழை வந்தான்
வழி - நின்றதோர் நறவேங்கை நிழல்வழி அடைந்தன்ன
உழி - உறைப்புழி ஓலைபோல
உளி - குயில்சேர் குளிர் காவுளி சேர்புறையும்
உள் - முல்லையங் குவட்டுள் வாழும்
அகம் - பயன்சாராப் பண்பில்சொல் பல்லாரகத்து
புறம் - செல்லும் என்னும் உயிர்ப்புறத்து இறுத்த மருண்மாலை
இல் - ஊரிலிருந்தார்

ஏழாம் வேற்றுமைக்குப் புதிய உருபுகளைக் கண்டறிந்து எடுத்துக் காட்டியுள்ள
நன்னூலார். பொருள், இடம், காலம், சினை, குணம். தொழில் ஆகியவற்றின்
அடியாகப் பிறக்கும் பெயர்ச்சொற்கள், ஆறாம் வேற்றுமைப் பொருளாகிய தற்கிழமை,
பிறிதின்கிழமை என்பனவற்றை ஏற்க இடம் அளித்து நிற்கும் எனக் குறிப்பிட்டிருப்பது
புதிய விளக்கம் ஆகும்.

மணியின்கண் இருக்கின்றது ஒளி.... தற்
பனையின்கண் வாழ்கின்றது அன்றில்.... பிறி
பொருளிடம்
ஊரின்கண் இருக்கும் இல்லம்.... தற்
ஆகாயத்தின்கன் பறக்கின்றது பருந்து.... பிறி
இடம் இடம்
நாளின்கண் நாழிகை உள்ளது.... தற்
வேனிற்கண் பாதிரி பூக்கும்.... பிறி
காலம் இடம்
கையின்கண் உள்ளது விரல்.... தற்
கையின்கண் விளங்குகின்றது கடகம்.... பிறி
சினை இடம்