பக்கம் எண் :

தொகைகள்36கி. செம்பியன்

கறுப்பின்கண் மிக்குள்ளது அழகு.... தற்
இளமையின்கண் வாய்த்தது செல்வம்.... பிறி
குணம் இடம்
ஆடற்கண் உள்ளது சதி.... தற்
ஆடற்கண் பாடப்பட்டது பாட்டு.... பிறி
தொழில் இடம்

ஏழாம் வேற்றுமைத் தொகை

இயக்கச் சுடர்



> இயக்கத்தின்கண் சுடர்
(இயக்கம்+அத்து+இன்+கண்) அத்து.
இன் சாரியைகள்; சுடர் - சுடர் போன்றவரைச்
சுடர் என்பது உவமை ஆகுபெயர்
அருவியாடி > அருவியின்கண் ஆடி
இலானடி சேர்ந்தார் > இலானடியின்கண் சேர்ந்தார்
கணித மேதை > கணிதத்தில் மேதை (இல்- 7-ஆம் வே, உருபு)
குடிப்பிறந்தார் > குடியின்கண் பிறந்தார்
பகல்வெல்லும் > பகலின்கண் வெல்லும்
பகுதிவாழ் மக்கள் > பகுதியின்கண் வாழ்மக்கள்
பணியிடை நீக்கம் > பணியிடையின்கண் நீக்கம்
(இடை - 7-ஆம் வே. உருபு)
மாணடி சேர்ந்தார் > மாணடிக்கண் சேர்ந்தார்

ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை

அம்பலவாணன் > அம்பலத்தில் ஆடும் வாணன்
அரசியல் பிழைத்தோர் > அரசியலில் பிழைத்தோர்(பிழை செய்தோர்)
அரங்கேற்றம் > அரங்கத்தில் ஏறும் ஏற்றம்
அல் அங்காடி > அல்லின்கண் நடத்தப்படும்
அங்காடி (அல்-இரவு, நாள் அல்லாதது)
ஆமூர் மல்லன் > ஆமூரின்கண் வாழும் மல்லன்