பக்கம் எண் :

தொகைகள்37கி. செம்பியன்


இடைத்தேர்தல்

> இடைக்கண் நடத்தப்படும் தேர்தல்
(இடை-7- ஆம் வே. உருபு
24 மணிநேர மருத்துவமனை > 24மணிநேரத்தின்கண்ணும் இயங்கும் மருத்துவமனை
ஈழத்தமிழர் > ஈழத்தின்கண் வாழும் தமிழர்
உச்சிப்பிள்ளையார் > உச்சியின்கண் உள்ள பிள்ளையார்
ஊருணி நீர் > ஊருணிக்கண் ஊறும் நீர்
ஊழிக்கூத்து > ஊழிக்கண் ஆடும் கூத்து
எதிர்நீச்சல் > எதிர்க்கண் அடிக்கும் நீச்சல் (எதிர்த்திசையில்)
எல்லைத் தகராறு > எல்லைக்கண் உண்டாகும் தகராறு
கங்கை நீர் > கங்கையின்கண் ஓடும் நீர்
கடல் ஆமை > கடலின்கண் வாழும் ஆமை
கடல் ஆரம் > கடலின்கண் தோன்றும் ஆரம் (முத்து)
கடற்கரைச் சாலை > கடற்கரையின்கண் அமைந்துள்ள சாலை
கடல் நீர் > கடலின்கண் ஊறும் நீர்
கடல்படை > கடலின்கண் உள்ள படை
கடல் மீன் > கடலின்கண் வாழும் மீன்
கல்லூரிப் பேராசிரியர் > கல்லூரியில் பணியாற்றும் போராசிரியர்
கழனிச் செந்நெல் > கழனியின்கண் வளர்ந்த செந்நெல்
களப்பலி > களத்தின்கண் கொடுக்கப்படும் பலி
கடல்முத்து > கடலின்கண் விளைந்த முத்து
களவேள்வி > களத்தின்கண் நடத்தப்படும் வேள்வி
காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி > காரியாற்றின்கண் துஞ்சிய (மறைந்த) நெடுங்கிள்ளி
காற்சிலம்பு > காலின்கண் அணியப்படும் சிலம்பு