பக்கம் எண் :

தொகைகள்38கி. செம்பியன்

காலைமுரசம் > காலைக்கண் ஒலிக்கும் முரசம்
காவிரி நீர் > காவிரியின்கண் ஓடிவரும் நீர்
காவிரி வெற்றிலை > காவிரிக்கண் விளையும் வெற்றிலை
கானக்கோழி > கானத்தில் வாழும் கோழி
கானமுயல் > கானத்தில் வாழும் முயல்
கானல்வரி

> கானலின்கண் பாடப்படும் வரி
(கானல்-கடற்கரைச் சோலை: வரி- வரிப்பாடல்)
கிணற்றுத்தவளை > கிணற்றின்கண் வாழும் தவளை
கிணற்று நீர் > கிணற்றில் ஊறும் நீர்
குன்றக் குரவர் > குன்றத்தில் வாழும் குரவர்
குஜராத்துக் கலவரம் > குஜராத்தின்கண் நடைபெற்ற கலவரம்
கூதிர்ப்பள்ளி

> கூதிர்க்கண் உறங்கும் பள்ளி
(கூதிர்- கூதிர் காலம், பள்ளி- படுக்கையறை)
கூடைப்பந்து > கூடைக்கண் போடப்படும் பந்து
கூண்டுக்கிளி > கூண்டில் வாழும் கிளி
கைக்கடிகாரம் > கையில் கட்டப்படும் கடிகாரம்
கைவேல் > கையில் உள்ள வேல்
கொடிப்பூ > கொடியில் பூத்த பூ
கோபுரக் கலசம் > கோபுரத்தில் உள்ள கலசம்
கோட்டுப்பூ > கோட்டில் பூத்த பூ (கோடு-கிளை)
கோடைவிழா > கோடையில் நடைபெரும் விழா
சுவர்க்கடிகாரம் > சுவரின்கண் மாட்டப்படும் கடிகாரம்
சாலைப்பாதுகாப்பு


> சாலையின்கண் செல்வோர்க்குப் பாதுகாப்பு
(சாலைக்குப் பாதுகாப்பு என நான்காம் வேற்றுமைத்
தொகை யாகவும் கருத இடமுண்டு)
சாலைமறியல் > சாலையின்கண் செய்யப்படும் மறியல்