பக்கம் எண் :

தொகைகள்39கி. செம்பியன்

சித்திரைத் திருவிழா > சித்திரையின்கண் நடத்தப்படும் திருவிழா
நகர வீதி > நகரத்தின்கண் உள்ள வீதி
நாள் அங்காடி > நாளின்கண் நடத்தப்படும் அங்காடி
நிலநடுக்கம் > நித்தின்கண் உண்டாகும் நடுக்கம்
நிழல்நீர் > நிழலின்கண் ஊறும் நீர்
நீர்க்குமிழி > நீரின்கண் தோன்றும் குமிழி
நீர்ப்பூ > நீரின்கண் பூக்கும் பூ
தரைப்படை > தரையின்கண் இயங்கும் படை
தலைமுடி > தலையின்கண் முளைக்கும் முடி
திரைப்படம் > திரையின்கண் தோன்றும் படம்
தில்லிப்பேச்சு > தில்லியில் நடைபெறும் பேச்சு
தீபாவளி மலர் > தீபாவளியில் வெளியாகும் மலர்
தூண்டிற் புழு > தூண்டிலில் கோக்கப்பட்ட புழு
தொட்டில் குழந்தை > தொட்டிலில் ஆடும் குழந்தை
தோட்டத் தொழிலளர் > தோட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்
பகல்நேர எக்ஸ்பிரஸ் > பகல்நேரத்தில் இயங்கும் விரைவி (எக்ஸ்பிரஸ்)
படுக்கை விரிப்பு > படுக்கையில் அமையும் விரிப்பு
பழனத் தாமரை > பழனத்தில் பூத்த தாமரை
பாதாள சாய்க்கடை > பாதாளத்தில் ஓடும் சாய்க்கடை
பாற்கடல் பள்ளி > பாற்கடலில் அமைந்த பள்ளி
பாலைவனச்சோலை > பாலைவனத்தில் வளர்ந்துள்ள சோலை
பொங்கல்மலர் > பொங்கலில் வெளியாகும் மலர்
மண்டைச் சுரப்பு > மண்டையில் ஊறும் சுரப்பு
மலைக்கள்ளன் > மலையின்கண் வாழும் கள்ளன்
மலையாரம் > மலையில் விளைந்த ஆரம் (சந்தனம்)