பக்கம் எண் :

தொகைகள்40கி. செம்பியன்

மலைச்சந்தனம் > மலையில் வளர்ந்த சந்தனம்
மலைப்பாம்பு > மலையில் வாழும் பாம்பு
மலைவாழை > மலையில் வளரும் வாழை
மலைவேங்கை > மலையில் வளரும் வேங்கை
மனைமாட்சி > மனையில் விளங்கும் மாட்சி
மாடப்புறா > மாடத்தின்கண் வாழும் புறா
மாலைநேரக் கல்லூரி > மாலைநேரத்தில் இயங்கும் கல்லூரி
மூக்குக்கயிறு > மூக்கின்கண் குத்தப்படும் கயிறு
மெய்வேல் > மெய்யில் (உடலில்) பாய்ந்த வேல்
மேட்டூர் அணை > மேட்டூரில் கட்டப்பட்டுள்ள அணை
வரையாடு > வரையில் (மலை) வாழும் ஆடு
வனவிலங்கு > வனத்தில் வாழும் விலங்கு
வான்படை > வானத்தில் இயங்கும் படை
வானூர் மதியம் > வானத்தில் ஊறும் மதியம் (மதி-நிலா)
விம்பிள்டன் டென்னிஸ் > விம்பிள்டனில் நடைபெறும் டென்னிஸ்
ஜம்மு படுகொலை > ஜம்முவில் நடந்த படுகொலை
வீதியுலா > வீதியில் நடைபெறும் உலா
வேர்க்கடலை > வேரில் தோன்றும் கடலை
வேர்ப்பலா > வேரில் பழுக்கும் பலா
வேனில் பள்ளி > வேனிலில் உறங்கும் பள்ளி
(கோடைகாலத்தில் நடத்தப்படும்
பள்ளிக்கூடத்திற்கும் இச்சொல் பொருந்தும்)