பக்கம் எண் :

தொகைகள்60கி. செம்பியன்

13. உவமைத்தொகை (அல்வழிப்புணர்ச்சி)

     'உவமத் தொகையே உவம இயல' என்பது தொல்காப்பியம். இதற்கு
'உவமத்தொகை உவம உருபு தொடர்ப்பொருள் போலப் பொருளுணர்த்தும்' எனச்
சேனாவரையர் பொருளுரைக்கின்றார். நன்னூலார் 'உவம உருபு இலது உவமத்
தொகையே' என்று நூற்பா செய்துள்ளார். உவம உருபுகள் மறைந்து வரவேண்டும்.
போல, புரைய, ஒப்ப, உறழ
மான, கடுப்ப, இயைய, ஏய்ப்ப
நேர, நிகர, அன்ன, இன்ன
ஆகியனவும், இவைபோன்ற பிறவும் உவம உருபுகள். 'பிற என்றதனால், போல்,
புரை என்றல் தொடக்கத்து வினையடியாற் பிறத்தற்குரிய மற்றை வினையெச்ச
விகற்பங்களும், பெயரெச்ச விகற்பங்களும், பொருவ, ஏற்ப, அனைய, இகல, எதிர,
சிவண, மலைய முதலானவையும் கொள்க'' என நன்னூல் காண்டிகை உரையாசிரியர்
எடுத்துக்காட்டியுள்ளர்.
புலிச்சாத்தன் > புலியன்ன சாத்தன்
மயில்மாதர் > மயிலன்ன மாதர்
இவை இரண்டும் சேனாவரையரின் எடுத்துக்காட்டுக்கள். உவமையைத் தொல்காப்பியர்
வினை, பயன், மெய், உரு, என நான்காகப் பாகுபடுத்திய அடிப்படையில், நன்னூல்
உரையாசிரியர்கள்,
வினை உவமத் தொகை - புலிக்கொற்றன்
குருவி கூப்பிட்டான்
பயன் உவமத் தொகை - மழைக்கை
கற்பக வள்ளல்
மெய் உவமத் தொகை - துடியிடை
குரும்பை முலை
உரு (நிறம்) உவமத் தொகை- பொற்சுணங்கு
பவளவாய்

என நான்காகக் காண்கின்றார்கள். மேலும்,