பக்கம் எண் :

தொகைகள்7கி. செம்பியன்

செலவு > நெறியைச் செல்லும்
கன்றல் > சூதினைக் கன்றும்
நோக்கல் > கணையை நோக்கும்
அஞ்சல் > கள்ளரை அஞ்சும்
சிதைப்பு > நாட்டைச் சிதைக்கும்

     உருபுகள் வெளிப்பட்டு வந்தால் வேற்றுமை விரி; உருபுகள் மறைந்துவிட்டால்
வேற்றுமைத் தொகை. வேற்றுமை குறித்த இவ் விளக்கங்களுடன்
சில புதிய எடுத்துக்காட்டுக்களை நோக்குவோம்.
தீமிதி
எனும்சொல் கூட்டத்தை எண்ணிப் பார்ப்போம். இதில் இரண்டு சொற்கள் உள்ளன.
தீ+மிதி
இதன் பொருள் தீயை மிதி என்பதாகும். ஐ உருபு மறைந்து விட்டதால் இஃது
இரண்டாம் வேற்றுமைத் தொகை. இரண்டாம் வேற்றுமை என்பதை எப்படி
உறுதிப்படுத்துவது' ஒவ்வோர் உருபாகச் சேர்த்துப் பார்ப்போம்:

ஆல் : தீயால் மிதி
கு : தீக்கு மிதி
இன் : தீயின் மிதி
அது : தீயது மிதி
கண் : தீக்கண் மிதி

இவை எல்லாவற்றையும் விடத் தீயை மிதி என்பதே பொருத்தமாக உள்ளது.
எங்கெங்கே குழப்பம் ஏற்படுகிறதோ அங்கங்கே மற்ற உருபுகளை இணைத்துப்
பார்த்தால் பொருள் விளங்கும். இஃது ஒரு வழி; மற்றொன்று எந்த வேற்றுமை எந்த
எந்தப் பொருளுக்கு வரும் என அறிந்து வைத்திருப்பது.
நிழற்குடை
எனும் சேர்க்கையைக் குறித்துச் சிந்திப்போம்.