நிழல் + ஐ + குடை |
> |
நிழலைக் குடை |
நிழல் + ஆல் + குடை |
> |
நிழலால் குடை |
நிழல் + கு + குடை |
> |
நிழற்குக்குடை |
நிழல் + இன் + குடை |
> |
நிழலின் குடை |
நிழல் + அது + குடை |
> |
நிழலது குடை |
நிழல் + கண் + குடை |
> |
நிழற்கண் குடை |
இவை எதிலுமே வேண்டிய பொருள் கிட்டவில்லையே!
நிழல்+ஐ+தரும் + குடை > நிழலைத்தரும் குடை: இதுவே பொருள்
பொருத்தம் உடையது. இங்கே இரண்டு செய்திகள் மறைந்துவிட்டன.
1. உருபு > ஐ
2. பயன் > தரும்
இதனை உருபும் பயனும் உடன்தொக்க தொகை என்பர். அதாவது
உருபும் பயனும் சேர்ந்து மறைந்துவிட்டன! நிழற்குடை என்றால் நிழலைத் தரும்
குடை என்பது பொருள். எனவே இதனை இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும்
உடன்தொக்க தொகை என்று அழைப்பர். இன்னும் பல எடுத்துக்காட்டுக்கள்
தரப்படுகின்றன. அவற்றை எப்படி விரித்தால் பொருள் சிறக்கும் என்பதனை
அறிந்துகொள்க.
இரண்டாம் வேற்றமைத் தொகை
இகழ்வார்ப் பொறுத்தல் |
> |
இகழ்வாரைப் பொறுத்தல் |
உரிமை மீறல் |
> |
உரிமையை மீறல் |
உருவு கண்டு |
> |
உருவினைக் கண்டு |
கயல் எழுதி |
> |
கயலை எழுதி கயல்- கெண்டைமீன்) |
கவவுக்கை ஞெகிழாமல் |
> |
கவவுக்கையை ஞெகிழாமல் (கவவுக்கை-இணைந்த கை) |
காதலற் பிரியாமல் |
> |
காதலனைப்பிரியாமல் |
கிளி கடித்து |
> |
கிளியைக் கடிந்து (கிளியை விரட்டி) |
|
|