தொகாநிலைத் தொடர்
(Non-elliptical compounds)
1. எழுவாய்த் தொடர்
மாதவி பாடினாள்.
மாதவி - எழுவாய். தொடரில் எழுவாய் முதலில் இருப்பதால்
இஃது எழுவாய்த் தொடர்.
2. விளித் தொடர்
இராமா! வா.
விளி முதலில் இருப்பதால் இது விளித் தொடர்.
3. வினைமுற்றுத் தொடர்
இவ்வினைமுற்றுத் தொடரில் இருவகை உண்டு. ஒன்று
தெரிநிலை வினைமுற்றுத் தொடர்.
பாடினாள் சீதை.
பாடினாள் என்னும் தெரிநிலை வினைமுற்று முதலில் இருப்பதால்
இது தெரிநிலை வினைமுற்றுத் தொடர்.
மற்றொன்று குறிப்பு வினைமுற்றுத் தொடர்.
சிறியன் வேலன்.
சிறியன் என்பது இங்கே குறிப்பு வினைமுற்று. குறிப்பு
வினைமுற்று இத்தொடரில் முதலில் இருப்பதால் இது குறிப்பு
வினைமுற்றுத் தொடர்.
4. வினையெச்சத் தொடர்
விழுந்து எழுந்தாள்.
விழுந்து என்பது தெரிநிலை வினையெச்சம்.தெரிநிலை
வினையெச்சம் இத்தொடரில் முதலி்ல் இருப்பதால் இது தெரிநிலை
வினையெச்சத் தொடர்.
|