பக்கம் எண் :

பொது இயல் 123


தொகாநிலைத் தொடரும் தொகைநிலைத் தொடரும் ஒரு சொல்
தன்மையுடையன. இவற்றைப் பிரித்தெழுதுவது தவறு.

3. உவமைத் தொகை

மலைத்தோள்.

இது மலை போன்ற தோள் என்று பொருள்படும். போன்ற
என்னும் உவம உருபு தொக்கி அஃதாவது மறைந்து வருகிறது. அதனால்,
இஃது உவமைத் தொகை.

4. வினைத் தொகை

கடிநாய்.

இது கடித்த நாய், கடிக்கிற நாய், கடிக்கும் நாய் என்று பொருள்
தரும். மூன்று காலம் காட்டும் வினைமுற்று விகுதி இத்தொடரில்
மறைந்திருக்கிறது; பெயரெச்சம் போலக் காணப்படுகிறது. ஆதலால்,
இது வினைத்தொகை. விளக்கமாகச் சொன்னால் பெயரெச்ச விகுதி
தொக்கதே வினைத் தொகை எனலாம். சுருங்கக் கூறினால் வினைச்
சொல்லின் பகுதியும் பெயர்ச் சொல்லும் சேர்ந்து வருவதையே வினைத்
தொகை என்பர்.

சுடுகாடு, குடிநீர் - இவை வினைத் தொகைகள்.

5.1 பண்புத் தொகை

இஃது இரண்டு பிரிவுபடும். பண்புத் தொகை என்பது ஒன்று;
இரு பெயரொட்டுப் பண்பத் தொகை என்பது மற்றொன்று.

இனிமையாகிய சொல் என்னும் தொடரை இன்சொல் என்று
சுருக்குகிறோம்; மை, ஆகிய என்பவை மறைந்துள்ளன.