இப்படிப் பண்புச் சொல்லும் பெயர்ச் சொல்லும் இருந்து மாறுதலடைந்து
வருந் தொகையைப் பண்புத் தொகை என்க. சுருங்கச் சொன்னால்
பண்பின் அடிச் சொல்லோடு தொடர்ந்து வருவது பண்புத் தொகை
எனலாம்.
பைந்தமிழ், கருங்கடல். - இவை
பண்புத் தொகைகள்.
5.2 இருபெயரெட்டுப் பண்புத் தொகை
பலாமரம்
இங்கே இரண்டு பெயர்கள் ஒட்டிப் பண்புத் தொகை போன்று
வந்துள்ளன. இவற்றுள் பலா என்பது சிறப்புப் பெயர்; மரம் என்பது
பொதுப் பெயர். இவ்வாறு சிறப்புப் பெயரும் பொதுப் பெயருமாகிய
இரு பெயர்கள் ஒட்டித் தொகையாகி வருமானால் இரு பெயரொட்டுப்
பண்புத் தொகை என்க.
தமிழ்மொழி,
வறுமைநோய்
இவை இருபெயரொட்டுப் பண்புத் தெகைகள். இரு பெயரொட்டுப்
பண்புத் தொகையில் இரு பெயர்களும் ஒன்றையே சுட்ட வேண்டும்
என்பதறிக. இதில் இருபெயர்களும் ஒருங்கு சேர்ந்து ஒரு
பெயரை
உணர்த்தும்.
6. அன்மொழித் தொகை
பைந்தொடி
வந்தாள்.
பைந்தொடி - அன்மொழித்தொகை. தொகைகளை
நிலைக்களமாகக் கொண்டு வருவது அன்மொழித் தொகை. இது
வேறு பொருள்தரும். பைந்தொடியுடையாள் என்பது பொருள்.
பெரும்பாலும் வாக்கியமாக இருந்தால் அன்றி அன்மொழித் தொகை
என்று அறிந்து கொள்வது இயலாது.
|