|
தொடரும்
தெகையும் தெரிந்து கொள்வதால் சந்திப்பிழை
இன்றி
எழுதலாம். எழுவாயத் தொடர், பெயரெச்சத் தொடர், வினை முற்றுத்
தொடர், அடுக்குத் தொடர் இவற்றிலும்,வினைத் தொகை, உம்மைத்
தொகை, இரண்டாம்வேற்றுமைத் தொகை இவற்றிலும் வல்லெழுத்து
மிகாது என்று தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். இரு பெயரொட்டுப்
பண்புத் தொகையிலும் உருபும் பயனும் உடன் தொக்க
தொகையிலும்
வல்லெழுத்து மிகும் என்று எளிதாக அறிந்து கொள்ளலாம். தமிழ்த்தாய்
- இரு பெயரொட்டுப் பண்புத் தொகையில் வலிமிக்கது
காண்க.
ஐம்பால் மூவிடங்களுக்கும் வரும் பொதுச் சொற்கள்
வேறு,
இல்லை, உண்டு என்பவை ஐம்பால் மூவிடங்களிலும் வரும்.
நான் வேறு.
நாம் வேறு.
நாங்கள் வேறு.
நீ வேறு.
நீங்கள் வேறு.
|
அவன் வேறு.
அவள் வேறு.
அவர்கள் வேறு.
அது வேறு.
அவை வேறு.
|
இப்படியே
இல்லை, உண்டு என்பனவற்றையும் சேர்த்து
அமைத்துக் கொள்க.
உயர்திணை மூன்று பால்களுக்கும் வரும் பொதுச்சொல்
யார் என்னும் வினாச் சொல்,
உயர்திணையில் உள்ள மூன்று
பால்களுக்கும் வரும்.
வந்தவன் யார்? வந்தவள் யார்?
வந்தவர் யார்?
குறிப்பு : ‘இங்கே வந்தது யார்?’ என்று எழுதுவது தவறு.
‘வந்தவர் யார்?’ என்றே எழுதுக.
|