பக்கம் எண் :

126நல்ல தமிழ் எழுத வேண்டுமா?


ஒரு பொருள் பன்மொழி

ஒரு பொருளைக் குறித்துப் பல சொற்கள் தொடர்ந்து வந்து
சிறப்புப் பொருள் தருவது ஒரு பொருள் பன்மொழி ஆகும். இது
பெரும்பாலும் செய்யுளில் வரும். இது மிகவும் என்னும் பொருள் தரும்.

நீண்ட நெடுந்தெரு (மிக நீண்ட தெரு)

இரட்டைக் கிளவி

ஒரு சொல் இருமுறை அடுக்கி வந்து ஒலிக்குறிப்பைக்
காட்டுவது இரட்டைக் கிளவி எனப்படும்.

வண்டி கடகட என்று ஓடுகின்றது.

தாகத்தால் தண்ணீரை மடமட என்று குடித்தான்.

கோயில் மணி கணகண என்று ஒலித்தது.

குறிப்பு : ஓடு ஓடு என்னும் அடுக்குத் தொடருள் உள்ள ஒரு
சொல்லைப் பிரித்தாலும் அது பொருள் தரும். இரட்டைக் கிளவியில்
ஒன்றைப் பிரித்தால் பொருள் வாராது. மேலும் இரட்டைக்
கிளவியினால் ஏற்படும் உணர்ச்சியும் கெடும்.

புதியன புகுதல்

‘வேண்டும்’ என்பதற்கு எதிர்மறை ‘வேண்டா’ என்பதே,
"அறத்தாறு இதுவென வேண்டா" என்பது திருக்குறள். வேண்டா
என்பதே சரியான சொல். ‘வேண்டாவாம்’ என்னும் சொல் இன்று
வேண்டாம் என்றே மருவிப் பெருவழக்காக வழங்கி வருகிறது;
இலக்கியத்திலும் புகுந்துவிட்டது.

‘இராமப்பய்யர் அம்மானை’ என்னும் நாட்டுப்பாடல் நூல்
திருமலை நாயக்கர் (1623-1659) கட்டளையால் இரண்டாம் சடைக்கத்
தேவர் என்ற தளவாய் சேதுபதியுடன் செய்த போரினை