பக்கம் எண் :

26நல்ல தமிழ் எழுத வேண்டுமா?


3. மூன்று உரைநடை இயக்கங்கள்

தமிழுலகில் இந்நாள் மூன்று உரைநடை இயக்கங்கள்
இயங்கி வருகின்றன. இம்மூன்று இயகக்கங்களும், தண்டமிழ்
அன்னையின் திருக்கோயிலுக்குச் செல்லும் மூன்று பாதைகள்,
இம்மூன்று பாதைகளும் தமிழ்க் கோயிலை நாடிச் செல்வது
உண்மைதான். ஆனால், நாம், இம்மூன்று பாதைகளும்
செம்மையான பாதைகளா? என்றும், அவற்றுள் எப்பாதை
செம்மையானது? என்றும் தெரிந்து கொள்ள வேண்டும்.
அந்த அந்தப் பாதையிலே சென்று பழகியவர்கள் அந்த
அந்தப் பாதையே செம்மையானது என்று வாதிடுகிறார்கள்;
வழக்காடுகிறார்கள். நாம் மூன்று பாதைகளிலும் போய்ப்
பார்த்து எந்தப் பாதை ஏற்ற பாதை என்று கண்டு தெளிய
வேண்டும்.

கொச்சைத் தமிழ் இயக்கம்

கொச்சை மொழி இயக்கம் என்றும், தனித் தமிழ்மொழி
இயக்கம் என்றும், நடுவழி மொழி இயக்கம் என்றும் மூன்று
இயக்கங்கள் தமிழ் உரைநடையில் காணப்படும். முதலாவது
கொச்சை மொழி இயக்கத்தை எடுத்துக் கொள்வோம். தமிழ்
உரைநடையில் பேசும் மொழிக்கும், எழுதும் மொழிக்கும்
மிகுந்த வேற்றுமை இருக்கிறது என்றும். அவ்வாறு
இருத்தலாகாது என்றும், அதனால் சிறிது படித்தவர்கள் மேலும்
படிக்க இயலாது. படித்ததை மறந்து விடுவதால் பேச்சு
மொழியிலே தமிழ் உரைநடை அமைய வேண்டும் என்றும்,
ஆங்கில உரைநடையில் பேச்சு மொழி போலவே எழுத்து
மொழியும் இருக்கிறது என்றும். நாட்டில் அறிவைப் பரப்ப
வேண்டுமெனில் கொச்சை மொழியில் உரைநடை எழுத
வேண்டும் என்றும், அப்படி எழுதுவதில் உயிர் இருக்கிறது
என்றும் கொச்சை மொழி நடை விரும்பிகள்