பக்கம் எண் :

மூன்று உரைநடை இயக்கங்கள்27


கூறுகிறார்கள். காலஞ்சென்ற வ.ரா. அவர்கள் பல்லுடைக்கும்
பண்டிதர் தமிழ் என்று நல்ல தமிழ் உரைநடையை எள்ளி,
நகையாடிக் கட்டுரை எழுதியதை நான் அறிவேன். அவரைப்
போன்ற கருத்துடையவர்கள் இன்றும் இந்நாட்டில் இல்லாமல்
இல்லை. நிரம்ப என்று எழுத வேண்டுவதை ரொம்ப என்றும்.
வேண்டும் என்று எழுத வேண்டுவதை வேணும் என்றும் பலர்
எழுதி வருகின்றனர். அப்பலருள் அறிந்து எழுதுவார் சிலர்;
அறியாது எழுதுவார் பலர். நம் முன்னோர்கள் செந்தமிழ்
என்றும் கொடுந்தமிழ் என்றும் பாகுபாடு செய்தார்கள்
பாண்டிநாட்டுத் தமிழே செந்தமிழ் என்று பலர் கூறினர்.
ஒரு சிலர் தஞ்சை நாட்டுத் தமிழே செந்தமிழ் என்றனர்.
இருசாரரும் தவறாகக் கூறினர். உரையாசிரியர் மூவருக்கும்
பின்வந்த சொல்லதிகார உரையாசிரியர் தெய்வச் சிலையாரும்,
சோழவந்தான் அரசஞ் சண்முகனாரும் அவ்வாறு கூறியதை
மறுத்துள்ளனர். தண்டமிழ் நாட்டுள் செந்தமிழ் நாடு என்றும்,
கொடுந்தமிழ் நாடு என்றும் பிரிப்பதைவிடத் தவறு வேறு
இருத்தல் இயலாது. இதை உணர்ந்த பாரதியார் தமிழ்நாடு
முழுவதையும் செந்தமிழ்நாடு என்று "செந்தமிழ் நாடெனும்
போதினிலே" எனத் தொடங்கும் பாட்டில் பாடிக் காட்டினார்.
செந்தமிழ் என்பதற்குச் செம்மையான தமிழ் (Standard Tamil)
என்றே பொருள் கொள்ள வேண்டும். செம்மையான தமிழ்
எனில் தமிழ் நாட்டில் எப்பகுதியிலிருக்கும் அறிஞர்களும்
ஒப்புக் கொள்ளும் தமிழே என்பதுதான் பொருத்தம்.
வாரேளே, சொன்னேளே, ஆத்துக்குப் போறீளே, நேக்குத்
தெரியாதே, ஆம்படையாள் என்பன போன்றவற்றைச்
செந்தமிழ் என்று சொல்லமுடியுமா? இம்மாதிரியான கொச்சைத்
தமிழில் எழுதுவது எளிய உரைநடையாகுமா? வந்திச்சு,
போச்சு, வாராக, சொன்னாக, போனாக, சொன்னாப்போல,
வந்தாப்போல, இசுத்துக்குச்சு, தங்காச்சி, அக்காச்சி, என்னாங்க,
எங்கிருக்காங்க, ரவுபகலா உழைக்கிறாக என்பன போன்றவற்றை
அமைத்து எழுதும் உரைநடையில் உயிர் இருக்கிறது என்று
கூறுவது பொருந்துமா? சிந்தித்துப் பாருங்கள். குழந்தை
இதழ்கள் கொச்சைத் தமிழில் எழுதித் தமிழைக் கொலை
புரிவதோடு குழந்தைகளைத் தவறான தமிழைக்