ஆதலால், தனித் தமிழ் இயக்கத்தார் அயல் நாட்டுச்
சொற்களையே அகற்றி எழுத வேண்டும் என்பர்;
‘மணியார்டரை’ப் பணவிடை (பணம் விடுப்பது) என்றும்.
‘கார்டு’க்கு அஞ்சலட்டை என்றும் ‘கவரு’க்கு அஞ்சலுறை
என்றும். ‘புக்போஸ்டு’ என்பதற்கு ‘நூல் அஞ்சல்’ என்றும்
எழுதுமாறு வற்புறுத்துவர். இத் தனித் தமிழியக்கத்தைத்
திறம்படத் தலைமை தாங்கி நடத்திய முதல்வர் மறைமலை
அடிகளார் ஆவார். அவர் மறந்தும் பிறமொழி கலவாது
எழுதியவர். இந்த இயக்கத்தால் பெருநன்மை தமிழ் உரை
நடையில் உண்டாயிற்று என்பது மறுக்க முடியாத உண்மை;
மறைக்க முடியாத உண்மையுமாகும்.
40,000 கி.மீ. சுற்றளவுள்ள உலகமே இன்று
சுருங்கிவிட்டது. உலகச் செய்திகளை இன்று நாளிதழ்கள்
மக்களுக்கு உடனுக்குடன் தெரிவித்து வருகின்றன. தமிழகத்தில்
பண்டு காணப்படாத புதுப் பொருள்களையும், புதிய நாகரிக
வாழ்வையும் இன்று காண்கிறோம். நாம் தமிழில்
உலகச்
செய்திகளும் உலக விவரங்களும் பல கலைகளும் எழுத
வேண்டுபவர்களாயிருக்கிறோம். ‘மட்கார்டு’க்கு
(Mudguard)
மட்காப்பு என்று சொல்லலாம். இப்படியே எல்லாப்
பொருள்களுக்கும் எப்படிச் சொல்ல முடியும்? ‘தம்மியங்கியில்
கோளாறு ஏற்பட்டதால் செப்பனிடுவோர் வந்து
அதனைச்
செப்பனிட்ட பின்னரே வர நேர்ந்ததால் குறிப்பிட்ட வேளை
கழித்து வரலாயிற்று’ என்று எப்பொழுதும் இப்படி எழுதுவது
இயலாது, என்ன செய்வது? இதனை முற்றும் கைப்பற்றுதல்
இயலாது.
நடுவழி மொழிக் கொள்கை இயக்கம்
இந்நிலையில் நாம் நடுவழி மொழிக் கொள்கை
இயக்கத்தைப் பின்பற்ற வேண்டுபவர்களாகிறோம்.
இக்காலத்துக்கு நடுவழி மொழிக் கொள்கையே (Via Media Policy)
ஏற்றது. இன்றியமையாத இடங்களில் வேறு மொழியைப்
பயன்படுத்துவோம். தெரு என்னும் தமிழ்ச் சொல் இருக்க
‘ரஸ்தா’ என்றாவது, ‘ரோட்’ என்றாவது எழுதுவது கூடாது.
சோறு என்னும் தூய தமிழ்ச் சொல் இருக்கச் சாதம் என்று
நாம் ஏன் எழுத வேண்டும்? தமிழ்
|