4. அஞ்ச வேண்டுவதில்லை
இலக்கண அறிவின் இன்றியமையாமை
மூன்று இயக்கங்களுள் நடுவழி மொழிநடை இயக்கமே
இக்கால நிலைக்கும் வாழ்வுக்கும் அறிவு வளர்ச்சிக்கும்
ஏற்றதாகும். நாம் நடுவழி மொழி நடையைப் பின்பற்றி
யாவருக்கும் பொதுவாக விளங்கும் முறையில் இலக்கணப்
பிழையின்றி எழுத வேண்டும். இன்று இலக்கணம் என்றதும்
மாணவர்களும், மற்றவர்களும் அஞ்சி அலறி
நடுங்கிவிடுகின்றார்கள். முற்கூறிய F.W.
கெல்லட் என்பார்,
"இதன் (தமிழ்) இலக்கணம் படிக்கப் படிக்க
விருப்பத்தை
உண்டாக்குவது" என்றார். ஆதாலால், ஒருவரும்
அஞ்ச
வேண்டுவதில்லை. இக்காரணத்தாலே தலைப்பும் அஞ்ச
வேண்டுவதில்லை என்று கொடுக்கப்பட்டுள்ளது. இன்று
இலக்கணம் கற்பிக்கும் முறையில் தவறு இருக்கும்
காரணத்தால்,
பலரும் இலக்கணம் என்று கேட்டதும் அலக்கணுறுகின்றனர்.
நூற்பாக்களை (சூத்திரங்களை) மனப்பாடம் செய்வதனால்
மட்டும் இலக்கண அறிவு பதிந்துவிடுவதில்லை. நூற்பாக்களை
மனப்பாடம் செய்யாமலே உரைநடை வாயிலாக எளிதில்
இலக்கண அறிவு பெறுதல் இயலும். எடுத்துக்காட்டுகளின்
வாயிலாக இலக்கண விதிகளை எளிதாக மனத்தில் படியுமாறு
செய்ய வேண்டும். கருத்து விளங்கிற்றா என்று கவனிக்க
வேண்டுமே அன்றி, நூற்பா மனப்பாடமாயிற்றா என்று
எவரும் கவலைகொள்ள வேண்டுவதில்லை.
கன்னித் தமிழ், தென்தமிழ், செந்தமிழ், பைந்தமிழ்,
தீந்தமிழ், ஒண்டமிழ், தண்டமிழ், தெய்வத்தமிழ்,
முத்தமிழ்,
மூவாத்தமிழ் என்றெல்லாம் கவிஞர் பலரால் பாராட்டப்படும்
தமிழ் மொழியானது. என்றுமுள இன்தமிழாகவும்
சிதையாத
செந்தமிழாகவும்
|