பக்கம் எண் :

32நல்ல தமிழ் எழுத வேண்டுமா?


இருக்க வேண்டுமானால், இலக்கணம் மக்களுக்கு
வற்புறுத்தப்படல் வேண்டும். இப்படிச் சேரநாட்டில்
பிற்காலத்தில் தமிழ் இலக்கணம் வற்புறுத்தப்படாத
நிலை ஏற்பட்டதால், மலையாள மொழி கிளை மொழியாகி
வேறு மொழிபோலச் சொல்லும்படியான நிலைமையை
அடைந்து விட்டதாய் மொழி நூல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.

சீன நாட்டுத் தத்துவஞானியும் சீர்திருத்தக் குரவரும்
கன்பூசியானிசம் என்னும் மதத்தை நிறுவியவருமாகிய கன்பூசியஸ்
என்ற பெரியார் அவ்வப்போது மொழி தவறாகச் செல்லும்போது
அதனை ஒல்லும் வகையெல்லாம் திருத்த வேண்டிய நிலையை
உணர்ந்து பன்னூறாண்டுகளுக்கு முன்னரே கூறியிருப்பதை
இங்குக் குறிப்பிடுவது பொருத்தமாகும். அறிஞர் ஒருவர்
கன்பூசியசை நோக்கி, "பெரியீர், சமுதாயத்தை ஆளும்
பொறுப்பு உம்மிடம் விடப்படுமாயின். நீவிர் யாது செய்வீர்?"
என்று வினவியபோது, அவர் "நான் முதலில் மொழியைத்
திருத்துவேன்..... மொழி திருத்தமாக இல்லாவிடின், ஒருவர்
சொல்வது அவர் கருதியவாறு பொருளுடையதாய் இராது.
அப்பொழுது செய்ய வேண்டுவது செய்யப்படாமல் இருக்கும்.
அவ்வாறு செய்ய வேண்டுவது செய்யப்படாமல் இருந்தால்,
ஒழுக்கமும் கலையும் கெடும்; நீதி வழி தடுமாறும்;
மக்கள் செய்வதறியாது குழப்பமடைவார்கள். இப்படிச்
சொல்லியதி்ல் ‘யதேச்சாதிகாரம்’ இல்லை, சொல்லியது
எல்லாவற்றைக் காட்டிலும் முக்கியமானது" என்று
கூறினாராம். அவர் கூறியது மிக மிக உண்மை என்று
சொல்லத் தேவையில்லை. கருத்தின் உரையே மொழி,
அம்மொழியானது திருத்தமாக இல்லையெனில் குழப்பநிலை
ஏற்படுவது இயல்பு. அக்குழப்ப நிலை உண்டாகாமல் மொழி
திருத்தமாக அமைந்திருப்பதற்கு இலக்கணம் இன்றியமையாதது.
இவ்வுண்மையை உணர்ந்தே நம் முன்னோர்கள் அவ்வப்போது
இலக்கணம் மிகவும் வேண்டுவது என்பதை வற்புறுத்தி
வந்திருக்கிறார்கள். கி.மு.2-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த
வள்ளுவர்,