உலகப் பொதுமறையான திருக்குறளில்,
"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப
இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு"
என்று இலக்கணத்தை வாழும் உயிர்களுக்குக்
கண்போல
இன்றியமையாததாக வற்புறுத்தி இருக்கக் காண்கிறோம்.
எழுத்து என்பது இலக்கணத்தைக் குறிக்கும். திருவள்ளுவர்
வழி நின்று பிற்கால ஒளவையாரும்.
"எண்ணும் எழுத்தும் கண்ணெணத்
தகும்"
என்று சுருக்கமாகக் கூறிவைத்தார்.
பழம்பாட்டு ஒன்று வீட்டு நெறிக்குக் கூட
இலக்கணம்
இன்றியமையாதது என்று பொருள்பட,
"எழுத்தறியத் தீரும் இழிதகைமை;
தீர்ந்தான்
மொழித்திறத்தின் முட்டறுப்பான் ஆகும்; -
மொழித்திறத்தின்
முட்டறுத்த நல்லோன் முதல்நூற் பொருள்உணர்ந்து
கட்டறுத்து வீடு பெறும்"
என்று கூறுகிறது. இது, தத்துவ நூல்களைத் தெளிவாகப்
படித்துத் தெரிந்து கொள்வதற்கும் இலக்கண அறிவு வேண்டும்
என்று வற்புறுத்துகிறது.
ஆரன் தூக்கு (Horn
Tooke) என்பவர்," இலக்கணம்
கற்பதற்குக் கடினமாய் இருந்தாலும் அது தத்துவ
உண்மைகளைக் கண்டு தெளிவதற்குக் கட்டயாம் வேண்டுவது...
சமயத்துக்கும், சமுதாயத்திற்கும், தொடர்புள்ள
விவரங்களுக்கும்
மிகமிக வேண்டும்" என்றார். இவர் கூறியிருப்பது
மேற்குறித்த
பழம் பாடலின் கருத்தை ஆதரிக்கிறது.
மேலும் இலக்கணம் ஒரு மொழிக்கு முதுகெலும்பு
போன்றது. முதுகெலும்பு இன்றி மக்கள் இயங்க இயலுமா?
இயலாது. முதுகெலும்பு இல்லாவிடின் விலங்கும் மனிதரும்
தசைப் பொதியாக இருக்க
ந4
|