பக்கம் எண் :

34நல்ல தமிழ் எழுத வேண்டுமா?


வேண்டுவதாகும். அதுபோன்று இலக்கணமின்றி மொழி
சிறந்து விளங்காது.

பிழையறப் பேசவும் எழுதவும் இலக்கணம் வேண்டும்.

இலக்கியத்தை நன்கு படித்துணர்ந்து கொள்வதற்கும்
இலக்கணம் வேண்டும்.

வாழ்க்கையில் பிறரால் ஏமாற்றப்படாமல் அறிவோடு
வாழ்க்கை நடத்துவதற்கு இலக்கணம் வேண்டும்.

அறிவு கூர்மையாவதற்கும் இலக்கணம் வேண்டும்.

ஒருவர் எழுதிய பொருளின் கருத்தை வருத்தமின்றித்
திட்டமாய் உணர்ந்து கொள்ளும் ஆற்றலைப் பெறுவதற்கும்
இலக்கணம் வேண்டும்.

மொழி பெயர்ப்புக்குக் கூட இலக்கணம் வேண்டும்.

‘நற்றாள்’ என்பதை ‘நல்தாள்` என்று பிரிப்பதற்கும்
‘அலைகடல்’ என்றால் ‘அலைகின்ற கடல்’ எனவும்,
‘அலைக்கடல்’ என்றால் ‘அலையைக் கொண்ட கடல்’
எனவும் வேறுபாடறிந்து பொருளுணர்ந்து பாட்டைச்
சுவைப்பதற்கும் இலக்கணம் தேவைப்படுகிறது. ‘நான்
ரூபாய் முன்னூறு அனுப்பியுள்ளேன்’ என்று எழுதிவிட்டு.
நூறு ரூபாய் மட்டும் அனுப்பிப் பின்னர், முந்நூறு ரூபாய்
அனுப்பினேனே என்று ஒருவர் எழுதினால், இலக்கண
அறிவு இல்லாதவர் இருநூறு ரூபாயை இழந்துபோக வேண்டியது
தான், எப்படி? முன்னூறு என்றால் முன் நூறு என்று
பொருள்படும். முந்நூறு என்றால் மூன்று நூறு என்று
பொருள்படும். பணத்தில் விழிப்பாயிருப்பதற்குங்கூட இலக்கண
அறிவு வேண்டுவதாகிறது. இப்படிப் பலவகையில் பயன்படும்
இலக்கணத்தை ஒருவரும் வெறுத்தல் கூடாது.

தமிழிலக்கணச் சிறப்பு

தமிழிலக்கணம் மிகுந்த அறிவியல் முறையில் அமைந்தது;
தருக்க முறையிலும் பொருந்தியது. தமிழ் செய்யுளிலக்கணமானது.