பக்கம் எண் :

அஞ்ச வேண்டுவதில்லை35


கருத்தை எதுகை மோனைக்கு இரையாக்காதவாறு விரிந்த
மனப்பான்மையில் அமைந்திருக்கிறது. இலக்கணம், அறியாத,
அறிந்து கொள்ள விரும்பாத, அறிய முயற்சி செய்யாத.
அறிந்து கொண்ட இலக்கண நூல்களையும் எட்டிப்பாராத
எழுத்தாளர்கள் வாய்க்கு வந்தவாறு பேசியும் எழுதியும்
வருகிறார்கள்; இலக்கணமே வேண்டுவதில்லை என்கிறார்கள்.
அவர்களைச் சிறிது நடைமுறைக்கு வேண்டிய இலக்கணம்
கற்குமாறு வேண்டுகிறேன்.

நன்னூலைப் படித்து வியப்படைந்த பிரதர்ட்டன் என்ற
ஆங்கிலேயர், "நன்னூலைப் போல மிகச் சிறந்த தருக்க
முறையில்்அமைந்த வேறோர் இலக்கண நூல் உலகிலேயே
இல்லை" என்று பாராட்டியுள்ளார். இதைவிடச் சிறந்தது
தொல்காப்பியம். தொல்காப்பியர்,

குற்றெழுத்தை ஒரு மாத்திரை உச்சரிக்க வேண்டுமென்றும்,

நெட்டெழுத்தை இரண்டு மாத்திரை உச்சரிக்க வேண்டுமென்றும்

மெய்யெழுத்தை அரை மாத்திரை ஒலிக்க வேண்டும்.

என்றும் கி.மு.4-ஆம் நூற்றாண்டிலேயே சொல்லிவைத்தார்.
மாத்திரை என்பது. கைந்நொடிப் பொழுதும் கண்ணிமைப்
பொழுதுமாகும். "உன்னல் காலே, ஊன்றல் அரையே,
முறுக்கல் முக்கால், விடத்தல் ஒன்றே." நினைப்பது கால்
மாத்திரையாகவும், விரல்களை ஒன்றின் மேல் ஒன்று வைத்தல்
அரை மாத்திரையாகவும், முறுக்குதல் முக்கால் மாத்திரையாகவும்,
விடுத்தல் ஒரு மாத்திரையாகவும் விநாடியின் சிறு பகுதியான
மாத்திரையை இங்ஙனம் பாகுபடுத்திக் கூறியுள்ளதை அறிந்து
வியப்படையாமல் இருத்தல் இயலாது. நேராகப் போகும்
ஒலியை நேரசை என்றும், வளைந்து போகும் ஒலியை
நிரையசை என்றும் செய்யுள் இலக்கணம் கூறுவது
விஞ்ஞானத்துக்குப் பொருத்தமாக இருப்பதைப் பார்க்கிறோம்.
பகு, பங்கு, நடு, நாடு என்னும் சொற்களுள் பங்கு என்னும்
சொல்லில் உள்ள ‘கு’ என்னும்